3ம் உலக போர் தொடங்கிடுச்சா? "நிலைமை மோசம்.." ஈரான் மீது இஸ்ரேல் மிக பெரிய தாக்குதல்! அடுத்து என்ன
டெல் அவிவ்: ஈரான் மீது முதல்முறையாக இஸ்ரேல் பெரியளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இது அங்கு நிலவிய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதேநேரம் ஈரான் இந்த விவகாரத்தில் உடனடியாக பதிலடி கொடுத்தால் அது பிராந்திய போரை ஏற்படுத்தலாம். எனவே, ஈரான் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது நிலைமை மோசமாகியுள்ளது. கடந்த அக். 1ம் தேதி ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.

திட்டம்: இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நிச்சயம் பதிலடி தரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் தாக்குதல் நடத்தாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று திடீரென ஈரான் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல் ஈரான் முழுக்க உள்ள ராணுவ தளங்கள் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா தொடக்கம் முதலே இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் காரணமாகவே ராணுவ தளங்களை மட்டுமே இஸ்ரேல் டார்கெட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் ராணுவப் படைத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள், ஆயுத உற்பத்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இப்போது முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் கூட இந்தத் தாக்குதலில் குறிவைக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இஸ்ரேல் அதுபோல எதுவும் செய்யவில்லை. ராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளது.
யாரும் எதிர்பார்க்கல: அதேநேரம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நேரத்தில் இஸ்ரேலிடம் இருந்து இப்படியொரு தாக்குதலை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டதால் பாதிப்பு பெரியளவில் இல்லை என்றும் ஈரான் கூறி தனது இமேஜை பாதுகாக்க முயல்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஈரான் ராணுவம் தயாராக வேண்டும் என்று ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி அறிவுறுத்தியுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைப் பொறுத்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல்களில் எப்போதும் ஈரான் உடனடியாக பதிலடி கொடுக்கும். ஆனால், இந்த முறை அப்படி முடிவெடுக்க வாய்ப்புகள் குறைவு.
ஈரான்: ஈரானை பொறுத்தவரை இது இப்போது மிகவும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.. ஏனென்றால் ஈரான்- ஈராக் போருக்குப் பிறகு, அங்கு இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டதே இல்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவம் அதிகளவில் இருக்கிறது. இதனால் ஈரானின் தலைவர்கள் இப்போது ஒரு பிராந்தியப் போருக்கு ரெடியாக இல்லை. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அது பிராந்திய போராக மாறும் என்பது ஈரானுக்கும் தெரியும் என்பதால் இந்த விவகாரத்தில் யோசித்தே முடிவெடுக்கும்.
தற்போதுள்ள சூழலை வைத்து பார்க்கும் போது இஸ்ரேல் ஈரான் போர் என்பது நெருங்கிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.. இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் இருந்தாலும் கூட, இதுவரை ஈரான் மீது இஸ்ரேல் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தியதே இல்லை. மறுபுறம், இதை அப்படியே விட்டுவிட்டாலும் அது ஈரானைப் பலவீனமாகக் காட்டிவிடும். எனவே, ஈரான் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதேநேரம் ஈரான் தாக்குதலை நடத்தினால் அடுத்துடுத்து பல உலக நாடுகள் உள்ளே வரலாம். இது 3ம் உலக போரையே ஆரம்பித்து வைக்கும்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications