2000 மீட்டர் ஆழத்தில் உடல்கள்! ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல்
தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையிலும் யார் யார் உடல் என்பதில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி. இவருக்கு வயது 63 ஆகிறது. இவர் கிழக்கு அஜர்பைஜானில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவர் மீண்டும் திரும்புகையில் மோசமான வானிலையால் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து தகவலறிந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுமார் 17 மணி நேரம் கழித்து அதிபர் ரைசி பயணித்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த விமானம் முற்றிலும் சிதிலமடைந்துவிட்டதால் அதில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 8 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதையடுத்து ரைசியின் மரணத்திற்கு பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள், உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரைசி உள்பட 8 பேரின் உடல்களை தேடும் பணிகளை ஈரான், ரஷ்யா, துருக்கி உள்பட பல வெளிநாட்டு மீட்பு பணியினரும் ஈடுபட்டு வந்தனர். பெல் 212 ஹெலிகாப்டர் விழுந்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 9 பேர் பயணித்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அதிபருடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், கிழக்கு அஜர்பைஜானின் தலைவர் உள்ளிட்டோர் பயணித்தனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த உடல்களில் எது ரைசியின் உடல் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கிறது.
உடல்களை மீட்பு படையினர் 2000 மீட்டர் உயரம் உள்ள செங்குத்து மலை பாதையில் இருந்து கடினமான சூழலில் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய உடல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள தஜ்ரிஷ் நகரை நோக்கி கொண்டு வரும் பணிகள் நடைபெறுகிறது. அங்கிருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும்.
ஈரான் அதிபர் ரைசிக்கு இறுதி சடங்குகளை நடத்தவும் ஈரான் அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதலில் தஜ்ரிஷ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு அதிபரின் உடல் அடையாளம் காணப்பட்டு பிறகு இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். விமான விபத்துகளில் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய அங்க அடையாளம், உடை உள்ளிட்டவற்றை கொண்டு அடையாளம் காணும் பணிகள் நடைபெறும். அதில் முடியாவிட்டால் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு அடையாளம் காணப்படும்.
இதையடுத்து ஈரான் அதிபரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக 2, 3 நாட்கள் வைக்கப்படும் என தெரிகிறது. ஈரான் நாட்டு அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் அமெரிக்காவின் பெல் 212 ரக ஹெலிகாப்டராகும். இது 5 டன் எடையை தாங்கும் திறன் கொண்டது. 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் உள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications