ஈரானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,036- மலேசியாவில் 46 பேர் பலி!
டெஹ்ரான்: ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,036 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கொரோனாவால் இதுவரை 47, 503 பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனாவில் உயிரிழப்பு ஏற்பட்ட சீனாவை விட இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரையில் இத்தாலியில்தான் அதிகபட்சமாக 13,155 பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவில் 5,110 பேரும் ஸ்பெயினில் 9,387 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸில் 3,036 பேரும் இங்கிலாந்தில் 2,352 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் படு உக்கிரமாக உள்ளது.

ஈரானில் 3,036 பேர் பலி
கொரோனாவால் ஈரானில் மொத்தம் 47,593 பேர் பாதிக்கபட்டனர். இவர்களில் 15,473 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 3,036 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3871 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.

மலேசியாவில் 46 பேர் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் இந்தியாவில்தான் அதிகபட்சமாக 56 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்ததாக மலேசியாவில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் 27 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

சிங்கப்பூர், இலங்கை நிலவரம்
சிங்கப்பூரில் இதுவரை 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் 3 பேர் பலியாகி உள்ளனர். மாலத்தீவில் கொரோனா மரணங்கள் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. மியான்மரில் இதுவரை ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். வங்கதேசத்தில் 6 பேரும் நேபாளில் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் 157 பேர் பலி
இந்தோனேசியாவில் கொரோனாவால் 157 பேர் பலியாகி இருக்கின்றனர். இங்கு 1,677 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தாய்லாந்து நாட்டில் 1,771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இங்கு 12 பேர் பலியாகி உள்ளனர். பிலிப்பைன்ஸில் 2311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்நாட்டில் 96 பேர் மரணித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை 23 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications