Hormuz: டிரம்ப் சொல்ல சொல்ல கேட்காத 'ஈரான்'.. வேலையை காட்ட துவங்கியது.. துட்டு கொடுத்தா தான் கேட் ஒப்பனாகும்!

Subscribe to Oneindia Tamil

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் மிக முக்கியமான கடல் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் புதிய கட்டண முறை வந்துள்ளது. ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இனி ஹார்முஸ்-ல் முடங்கியிருக்கும் கப்பல்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு எளிதாக வெளியேறலாம். ஆனால் இந்த கட்டணத்தால் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரும் அபாயம் உள்ளது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் சூழ்நிலைக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் இனிமேல் ஈரானின் அனுமதி பெற்ற பின்பு, கட்டணம் செலுத்திய பின்பு செல்ல கூடிய வாய்ப்பு உருவாக்கியுள்ளது. இதை ஆரம்பம் முதல் டிரம்ப் எதிர்த்து வந்தாலும், ஈரான் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக உள்ளது.

iran oil hormuz War iran hormuz strait toll hormuz new shipping fee persian gulf strait authority vessel information declaration 40 questions iran hormuz toll 2 million brent crude oil price surge india petrol diesel price hike hormuz strait crisis 2026 iran charges ships hormuz passage hormuz vessel declaration form middle east oil route toll iran hormuz authority pgSA global oil price impact hormuz india iran hormuz negotiation hormuz toll effect on india fuel 40 2 2026

ஹார்முஸ் நீரிணை என்பது பாரசீக வளைகுடாவை அரபிக்கடலுடன் இணைக்கும் குறுகிய கடல் பாதையாகும். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஈராக் மற்றும் ஈரான் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் பெரும்பாலும் இந்த நீரிணை வழியாக உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

கப்பல்களுக்கு புதிய அனுமதி மற்றும் கட்டண விதி

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை அதிகாரப்பூர்வமாக வலுப்படுத்தும் நடவடிக்கையாக ஈரான் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது.

'பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் அதாரிட்டி' என்ற புதிய அமைப்பை கடந்த வாரம் ஈரான் உருவாக்கியுள்ளதாக சர்வதேச கப்பல் துறை வெளியீடான லாய்ட்ஸ் லிஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பின் கீழ், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதே நேரத்தில் கட்டணமும் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹார்முஸ் நீரிணை மீது தனது கட்டுப்பாட்டை ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்த தொடங்கியுள்ளது என்று சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

40 கேள்விகள்

புதிய விதிகளின் கீழ், "Vessel Information Declaration" என்ற படிவத்தை கப்பல் நிறுவனங்கள் நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் கப்பலின் பெயர், அடையாள எண், உரிமையாளர் விவரங்கள், காப்பீட்டு தகவல்கள், பணியாளர் விவரங்கள் மற்றும் எந்த பாதை வழியாக பயணம் செய்யப்படுகிறது போன்ற தகவல்கள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். மொத்தம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கொண்ட இந்த ஆவணம் மூலம், ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களின் முழு கண்காணிப்பையும் ஈரான் மேற்கொள்ள முயற்சிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் கட்டணம் எவ்வளவு?

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் லாய்ட்ஸ் லிஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, குறைந்தது ஒரு கப்பல் நிறுவனம் சுமார் 2 மில்லியன் டாலர் அளவிற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கட்டண உயர்வு எதிர்காலத்தில் உலகளாவிய கப்பல் போக்குவரத்து செலவை பெரிதும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தற்போதைய சந்தை தரவுகளின்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 104 டாலரை கடந்துள்ளது. அதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 98 டாலருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஹார்முஸ்-ல் பயணம் செய்வதற்காக 2 மில்லியன் டாலர் தொகையும் இனி கச்சா எண்ணெய் விலையில் தான் விதிக்கப்படும் என்பதால் சந்தை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டி கட்டாயம் உருவாகும். ஏற்கனவே இன்சூரன்ஸ் மற்றும் இதர கட்டணம் பெரும் சுமையாக இருக்கும் வேளையில் ஈரானின் இப்புதிய அறிவிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விரைவில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியா தரப்பில் ஈரான் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் அனுமதிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதேபோல் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் இந்த வாரம் இந்தியா வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+