“சிங்கம் சிங்கிளாதான் டிவி பார்க்கும்”.. அதுவும் “சிம்பிள்” டிரஸ்ஸோட!
டெஹ்ரான்: அமெரிக்க அதிபரைத் தொடர்ந்து தற்போது ஈரான் அதிபரும் தான் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைப் பார்த்து ரசித்ததை படம் போட்டு வெளிப்படுத்தியுள்ளார்.
என்ன.. ஒபாமா ஓடும் விமானத்தில் டிவி பார்த்தார். ஈரான் அதிபர் ஹசன் ரொஹானி தன்னந்தனியாக டிவி பார்த்துள்ளார்.
அதை விட முக்கியமானது தனது பாரம்பரிய உடையில் அல்லாமல் படு சிம்பிளான "டிராக் சூட்டில்" அவர் அமர்ந்துள்ளார். இப்படிப்பட்ட சிம்பிள் டிரஸ்களில் ஈரான் அதிபரைப் பார்ப்பது என்பதே அரிதானது என்பதால் டிவிட்டரில் வெளியாகியுள்ள இப்படத்தை ஈரானியர்களே ரசித்துப் பார்த்து வருகிறார்களாம்.

ஈரான் – நைஜீரியா போட்டி
ஈரான் அணியும், நைஜீரியா அணியும் மோதிய போட்டியைத்தான் ஹசன் பார்த்த ரசித்துள்ளார். அதுதான் தற்போது டிவிட்டரில் வெளியாகியுள்ளது.

மத அடையாளங்களைத் துறந்து
மத ரீதியான அடையாளம் எதுவும் இல்லாமல், படு சிம்பிளான உடையில், சாதாரண ஒரு மனிதராக இதில் காட்சி தருகிறார் ஹசன்.

டீம் இ மில்லி
ஈரான் அணிக்கு பெர்சிய மொழியில் டீம் இ மில்லி என்று பெயர் உண்டு.

சட்டையில் பேட்ஜ்
ஹசன் போட்டிருந்த டி சர்ட்டில் ஈரான் அணியின் இலச்சினை அடங்கிய பேட்ஜ் இருந்தது.. இந்தப் படம் ஹசனின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

வாழ்த்துகள்..
இந்தப் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. படத்துடன், ஈரான் அணிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார் ஹசன்- ஆங்கிலத்தில்.

பெருமையாக இருக்குப்பா
மேலும் தனது வாழ்த்தில், எங்களது அணியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் மிகச் சிறப்பான நிலையை அவர்கள் தொடுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஹசன்.

உடையைக் களைந்தது முதல் முறை
ஈரான் அதிபர் ஹசன், தனது பாரம்பரிய உடையில் இல்லாமல் காட்சி அளிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு 90களில் அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் வாங்க வந்தபோதுதான் சிம்பிளான உடையில் வந்திருந்தார்.

பெரும் வரவேற்பு
ஹசனின் இந்தப் புகைப்படத்திற்குப் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. டிவிட் வெளியான சில மணி நேரங்களிலேயே 3000 ரீட்வீட்கள் பறந்து விட்டன. 2600 முறை இது பேவரைட்டாகியுள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications