இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்
Recommended Video
தெஹ்ரான்: இனி எந்த ஒரு சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதலை நடத்தியது என்று கூறி அதற்கு ஆதாரமாக ஒரு செயற்கைகோள் படத்தையும் அமெரிக்கா வெளியிட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு அதன் விலையும் உயர்ந்துவிட்டது.

சூழல்
எனினும் எண்ணெய் ஆலை மீதான தாக்குதல் குறித்து ஈரான் கூறுகையில் அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் கூறியது. அத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்தால் போரை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தது.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் தலைவர் அயத்துலா அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அழுத்தம்
அப்போது அவர் கூறுகையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் இல்லை. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுவது எங்களுக்கு தெரிகிறது.

இனி பேச்சுவார்த்தை இல்லை
ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் பலிக்கிடா ஆக மாட்டோம். அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என கூறினார் அலி.
-
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications