ஆமா, அணுசக்தி நிலையங்களை அழிச்சிட்டாங்க.. அமெரிக்கா தாக்குதலில் சேதம் எவ்வளவு? ஒப்புக்கொண்ட ஈரான்!
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் ஒரு பகுதியாக அமெரிக்கா, ஈரான் மீது வெடிகுண்டு, ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 அணுசக்தி நிலையங்களும் பெரும் சேதத்துக்கு உள்ளாகிவிட்டது என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஐநாவில் புகாரளிக்கப்படும் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போரில் அமெரிக்காவும் நுழைந்தது. இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி ஏவுகணைகள் மூலம் தாக்கி கொண்டன. இதற்கிடையே திடீரென்று என்ட்ரியான அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானை குறிவைத்து தாக்கியது. ஈரான் அணுகுண்டு தயாரிக்க கூடாது என்பது தான் இஸ்ரேல், அமெரிக்காவின் நோக்கமாகும்.

அதனை மனதில் வைத்தே இருநாடுகளும் ஈரானிடம் சண்டை செய்தன. கடந்த 22ம் தேதி திடீரென்று அமெரிக்கா, ஈரானில் உள்ள முக்கிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசியும், ஏவுகணைகளை வீசியும் தாக்கியது.
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா ‛அட்டாக்' செய்தது. இந்த 3 அணுசக்தி நிலையங்களில் தான் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை செறிவூட்டி வந்த நிலையில் அதனை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மோதல் வலுத்தது. அமெரிக்கா போரை நிறுத்த இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போர் முடிவுக்கு வந்தது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தாலும் கூட ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. ஈரானில் இனி அணுஆயுதம் செய்ய முடியுமா? முடியாதா?, அணுஆயுத திட்டத்துக்கான கட்டமைப்பை அமெரிக்கா முற்றிலும் நொறுக்கிவிட்டதா? இல்லாவிட்டால் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லையா? என்று பல கேள்விகள் எழுந்தன.
அதுமட்டுமின்றி ஈரான் முன்னெச்சரிக்கையாக 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பத்திரப்படுத்தி உள்ளது. இதன்மூலம் 10 அணுஆயுதங்களை தயாரிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தை மொத்தமாக முடக்கவில்லை.
ஈரான் மீதான தாக்குதலில் அந்த நாட்டின் அணுசக்தி திட்டம் 2 மாதம் வரை பின்னுக்கு சென்றுள்ளது. இதில் இருந்து ஈரான் மீண்டு வரலாம் என்று அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்தது. ஆனால் அதனை டிரம்ப் மறுத்தார். அமெரிக்காவின் துல்லிய தாக்குதலின் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் கடும் சேதமடைந்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் 10 ஆண்டுகள் வரை பின்நோக்கி சென்றுவிட்டது என்றார்.
இந்நிலையில் போர் நிறுத்தத்துக்கு பிறகு ஈரான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்களின் நிலை என்ன? என்பது பற்றி ஈரான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே கூறுகையில், ‛‛நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவின் தாக்குதலில் மோசமாக சேதமடைந்துள்ளது. இது நிச்சயமாக தெரிகிறது'' என்றார்.
அதேபோல் லெபனான் நாட்டின் ஊடகத்துக்கு ஈரானின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே, ‛‛ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் ஐநாவில் புகார் அளிப்போம்'' என்றார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் எந்தவொரு எழுத்து பூர்வ ஒப்பந்தமும் செய்யவில்லை. ஒப்பந்தத்தின் சாரம்சம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்துவதாக தான் உள்ளது'' என்றார். இதன்மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பெரிய சேதமடைந்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.
முன்னதாக கடந்த 22ம் தேதி அதிகாலையில் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது 2 ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியது. இதில் ஒன்று GBU-57 Massive Ordnance Penetrator என்னும் குண்டு. இது சுரங்கம் மற்றும் பாதாள கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. ‛பங்கர் பஸ்டர்' குண்டை பி 2 பாம்பர்ஸ் ஸ்பிரிட் என்ற போர் விமானம் மூலமாக அமெரிக்கா வீசியது.
பூமிக்கடியில் ஈரான் அமைத்து இருந்த ஃபோர்டோ அணுசக்தி நிலையம் மீது 14 ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீசியது. இதில் ஒரு குண்டின் எடை 13,600 கிலோவாகும். நீளம் 20.7 அடியாகும். இந்த குண்டு தரையில் விழுந்ததும் 200 அடி ஆழத்துக்கு துளைத்து கொண்டு சென்று வெடித்து சிதறியது. அதேபோல் நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா 30 TomahawK ஏவுகணைகளை தாக்கி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications