இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா ஸ்டைலில் மற்றொரு நாடும் அறிவிப்பு.. என்ன காரணம்!
தெஹ்ரான்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்தியர்கள் கூட அமெரிக்காவுக்கு விசா பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே மற்றொரு நாடும் இப்போது இந்தியர்களுக்கு விசா தொடர்பாகச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர்கள் மட்டுமின்றி, சட்டப்பூர்வமாகச் சென்றவர்களும் கூட பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் விசா பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது.

மற்றொரு நாடு
வெளிப்படையாகத் தடை இல்லை என்றாலும் கூட இந்தியர்களுக்கு விசா கிடைப்பதில் கெடுபிடிகள் இருக்கிறது. ரெட்டிட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பார்த்தாலே இது நமக்குத் தெளிவாகத் தெரியும். இதற்கிடையே மற்றொரு நாடும் இந்தியர்களுக்கு விசா தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
விசா சலுகை நீக்கம்
மத்தியக் கிழக்கில் உள்ள ஈரான் தான் அந்த நாடு.. இதற்கு முன்பு வரை ஈரான் செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற சூழலே இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கான இந்த விசா இல்லாத பயண வசதியை ஈரான் அரசு நவம்பர் 22ம் தேதி உடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இனி இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல விசா கட்டாயம் தேவை.. இணைப்பு பயணமாக ஈரான் ஏர்போர்ட் செல்வோருக்கும் கூட விசா தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் "ஈரான் அரசு, நவம்பர் 22ம் தேதி முதல் இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் விசா விலக்கு வசதியை நிறுத்தியுள்ளது. இந்த வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த குறிப்பிட்ட தேதியிலிருந்து, இந்தியர்கள் ஈரானுக்குள் நுழையவோ அல்லது அதன் வழியாகப் பயணிக்கவோ விசா பெற வேண்டும்
என்ன காரணம்
ஈரானுக்குச் செல்லத் திட்டமிடும் அனைத்து இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். விசா இல்லாத பயணம் அல்லது ஈரான் வேறு நாடுகளுக்கு ஈஸியாக செல்ல ஏற்பாடு செய்து தருகிறோம் எனச் சொல்லும் ஏஜெண்டுகளை தவிர்க்கவும். இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகள் சொல்லிப் பல இந்தியர்களை ஈரானுக்கு சில ஏஜெண்டுகள் கூட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து எங்களுக்குப் பல புகார்கள் வந்துள்ளன. விசா விலக்கு வசதியைச் சொல்லி ஏமாற்றியுள்ளனர். ஈரானுக்கு சென்றவுடன், அவர்களில் பலர் பணத்திற்காகக் கடத்தப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
புதிய விதிகளின் கீழ் ஈரான் நாட்டிற்குச் செல்லும் அனைவரும் விசா வைத்திருக்க வேண்டும். மத்திய ஆசிய நாடுகளுக்கு ஈரான் வழியாக கனெக்ஷன் விமானம் மூலம் செல்வோரும் விசா பெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் பயணிகள் உரிய விசாவை வைத்திருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பல காலமாகவே நல்லுறவே இருந்து வருகிறது. ஈரானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவே விசா விலக்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இதனால் இந்தியர்கள் பலரும் பாதிக்கப்படுவதாலேயே இந்த முறை நிறுத்தப்படுகிறது. இதனால் இந்தியா ஈரான் இடையேயான உறவில் எந்தவொரு சிக்கலும் இல்லை.
-
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
"நாங்க ஷாக் ஆயிட்டோம்!".. உதவி கேட்டு கதறும் டிரம்ப்.. ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications