ஹார்முஸ் நீரிணை Close.. ஈரானின் மிரட்டல்.. அமெரிக்காவுக்கு அடுத்த நெருக்கடி!
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் தரப்பில் ஒரு கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. நேற்று ஈரான் அரசு லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியது மூலம் ஹார்முஸ் நீரிணை அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் முழுமையாக திறக்கப்படுகிறது என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை தொடர்ந்து தனது கடற்படை கொண்டு முடக்கி வந்தால், ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை குழுவில் முக்கிய நபராக இகுக்கும் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தரப்பின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
முகமது பாகர் காலிபாப் தனது எக்ஸ் பதிவில் "அமெரிக்க கடற்படையின் Blockade தொடர்ந்தால் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்காது" என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த நீரிணை வழியாக செல்லும் போக்குவரத்து ஈரான் அரசின் அனுமதியைப் பொறுத்தே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட கப்பல் ஹார்முஸ்-ஐ கடக்க முயன்று மீண்டும் திரும்பியது.
ஹார்முஸ் நீரிணை உலகின் பல நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு மிக முக்கியமான பாதையாகும். இதை மூடுவது மூலம் உலக அளவில் எரிபொருள் விலையை பாதிக்கும் என்பதால் உலகின் அனைத்து நாடுகளும் இப்பாதையை விரைவாக திறக்க கோரிக்கை வைத்து வருகிறது. ஈரான் தரப்பின் இந்த எச்சரிக்கை, அமெரிக்காவின் முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் டிரம்ப் நேற்று இரவு ஒரு மணி நேரத்தில் போர் தொடர்பாக ஏழு முக்கிய விஷயங்களை ஈரான் வாக்குறுதி அளித்ததாக ட்ரூத் சோஷியல் தளத்தில் குறிப்பிட்டார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்றும் முகமது பாகர் காலிபாப் பொட்டில் அடித்து போல் தெரிவித்தார்.
"இந்த பொய்களால் அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறவில்லை. சொல்லப்போனால் இந்த பொய்களால் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தைகளிலும் கூட எவ்விதமான முன்னேற்றமும் அமெரிக்கா காணவில்லை" என்று காலிபாப் தெரிவித்தார். ஈரான் அரசின் இந்த கடுமையான விமர்சனம், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.
ஈரான் ஹார்முஸ்-ஐ முடிவதாக எச்சரித்துள்ளது, அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தைகளுக்கு புதிய தடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ள 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.














Click it and Unblock the Notifications