ஆக்டிவேட் செய்ய போகிறோம்! அணு ஆயுத வாட்ச் டாக்கிற்கு ஈரான் அனுப்பிய எச்சரிக்கை! ரெடியாகும் அணுகுண்டு
டெஹ்ரான்: சமீபத்தில் ஈரான் மீது ஐநாவின் அணு ஆயுத வாட்ச் டாக்.. அதாவது கண்காணிப்பு அமைப்பு விமர்சனம் வைத்து இருந்தது. அணு சக்தியை பயன்படுத்துவதில் ஈரான் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை.. அவர்கள் அணுவை பயன்படுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தது.
இதன் காரணமாக கடுப்பான ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போகிறதாம். அதனால் சென்ட்ரிபுகல் அமைப்பில்தான் அணுவை செறிவூட்ட முடியும். அதாவது ஒரு சிலிண்டர் அமைப்புகளை குறிப்பிட்ட வாயுக்களை அனுப்ப வேண்டும். இதன் மூலம் அணுவை செறிவூட்ட முடியும்.

இப்படிப்பட்ட அணுவை செறிவூட்டினால் மட்டுமே.. அதை ஆயுதமாக பயன்படுத்த முடியும். இதைத்தான் ஆக்டிவேட் செய்ய போவதாக ஈரான் அறிவித்து உள்ளது.
அணு உலை: ஏற்கனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..
ஈரான் அணு ஆயுதம்: இதற்கு இடையில்தான் தங்களின் அணு ஆயுத கொள்கையை ,மறுபரிசீலனை செய்ய போவதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணு ஆயுதம் வேண்டாம் என்ற கொள்கையை அந்த நாடு மறுபரிசீலனை செய்யும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது.
ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். ஆனால் இதில் சிக்கலே.. ஹிஸ்புல்லா இயக்கம் தற்போது சேதங்களை சந்தித்து உள்ளதால்.. அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு சில வாரங்கள் ஏற்படலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போவதாக அறிவித்து உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications