Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை விடுங்க.. டிரம்பிடம் வசமாக சிக்கிய அமீரகம் - சீனா - துருக்கி.. ஈரானால் வந்த பெரிய பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவை காட்டிலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தான் அதிக பாதிப்பை எதிர்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஈரானை முடக்கும் வகையில் அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்வோருக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இதனால் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அதனை மறுபரிசீலனை செய்ய தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் போராடி வரும் நிலையில் டிரம்பின் இந்த செயல் ஈரானுக்கு பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது.

iran-trade-row-donald-trump-25-percent-tariffs-will-affect-uae-china-turkey-and-european-union

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு நடவடிக்கையால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ஈரானை எடுத்து கொண்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகபட்சமாக வர்த்தகம் செய்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஈரானுக்கு 21 பில்லியன் டாலர் மதிப்புக்கு பொருட்கள் ஏற்றுமதியாகிறது. இது ஈரானின் இறக்குமதியில் 30 சதவீதமாகும்.

இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் சீனா உள்ளது. சீனாவில் இருந்து ஈரானுக்கு 17 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் செல்கிறது. இது ஈரானின் இறக்குமதியில் 26 சதவீதமாகும். 3வது இடத்தில் துருக்கி உள்ளது. துருக்கியில் இருந்து ஈரானுக்கு 11 பில்லியன் டாலர் செல்கிறது. இது ஈரானின் மொத்த இறக்குமதியில் 16 சதவீதமாகும். அதற்கு அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. அங்கிருந்து ஈரானுக்கு 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஈரானுக்கு செல்கிறது. இது ஈரானின் இறக்குமதியில் 9 சதவீதமாகும்.

இதற்கு அடுத்த லிஸ்ட்டில் தான் நம் நாடு உள்ளது. நம் நாட்டுக்கும் ஈரானுக்கும் இடையேயான வர்த்தகம் என்பது குறைவாக தான் உள்ளது. நம் நாடும், ஈரானும் நல்ல நட்பு நாடுகள் தான். ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளால் இருநாடுகள் இடையே வர்த்தகம் குறைவாக தான் நடக்கிறது.

கடந்த 2024ம் ஈரான் பல்வேறு நாடுகளில் இருந்து 68 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் நம் நாட்டில் இருந்து குறைந்த அளவில் மட்டுமே பொருட்கள் சென்றது. அதாவது நம் நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையே வெறும் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது. இதில் நம் நாடு 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை நம் நாடு ஏற்றுமதி செய்தது. இது நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் வெறும் 0.15 சதவீதம் தான்.

இதனால் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பால் நம் நாடு ஈரான் வர்த்தகத்தை கைவிடும்பட்சத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு கூட அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக சிறிய அளவில் தான் பாதிப்பு இருக்கும். அதற்கும் கூட சில வாரங்களில் புதிய மார்க்கெட்டை தேடி பிடிக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் ஐக்கிய அரபு அமீரகம், சீனா, துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை தான் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளது. இதில் சீனாவை தவிர பிற நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் நெருக்கமாக உள்ளன. இதனால் டிரம்ப்பின் இந்த வரி விதிப்பால் அவரது நட்பு நாடுகளே அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+