கண்களில் கண்ணீர்... உயர்மட்ட தலைவர் கமேனி மரணத்தை ஈரான் அறிவித்தது எப்படி? கலங்கடிக்கும் வீடியோ
டெஹ்ரான்: ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல்- அமெரிக்கா சேர்ந்து கொன்றுள்ளது. அவருக்கு வயது 86. இதனால் ஈரானின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமனேியின் மரண செய்தியை ஈரான் நாட்டு மக்களுக்கு அறிவித்தது எப்படி? என்பது பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே கடும் மோதல் காலம் காலமாக உள்ளது. இதனால் ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது இருநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும். இதனால் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்துவதாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 3 கட்டங்களாக நடந்தும் பலனளிக்கவில்லை. இதனால் டிரம்ப் டென்ஷனானார். இந்நிலையில் தான் நேற்று திடீரென்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதனால் புதிய போர் உருவானது. இன்று 2வது நாளாக போர் நடந்து வருகிறது.
ஒருபக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் இஸ்ரேல் என இருநாடுகளும் ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. போர் விமானங்கள், போர்க்கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் ஈரானை பதம் பார்க்கின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் ஈரானில் மொத்தம் 100 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டெஹ்ரானில் உள்ள அரசு துறை அலுவலகங்கள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்பட்டது. இதுதவிர ஈரான் பிரதமர் அலுவலகம், உளவுத்துறை அலுவலகம், அணுசக்தி திட்ட அமைப்பின் கட்டடம் உள்பட பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். டெஹ்ரானில் உள்ள தனது அலுவலக இல்லத்தில் வழக்கம்போல் பணி செய்தபோது அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அயதுல்லா அலி கமேனி மரணமடைந்தார்.
இந்த போரில் அயதுல்லா அலி கமேனியின் மரணம் ஈரானை கலங்கடித்துள்ளது. கடந்த 1989 ம் ஆண்டில் இருந்து ஈரான் உயர்மட்ட தலைவராக அயதுல்லா அலி கமேனி செயல்பட்டு வரும் நிலையில் அவரை அமெரிக்கா - இஸ்ரேல் சேர்ந்து கொன்றுள்ளது. இந்த போரே அயதுல்லா அலி கமேனியை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருநாடுகள் தொடர்ந்தன. தற்போது அது வெற்றிகரமாக இஸ்ரேல் - அமெரிக்கா முடித்துள்ளது.
அயதுல்லா அலி கமேனி இறந்ததை நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதலில் உறுதி செய்தார். அதன்பிறகு டிரம்ப் இன்று காலையில் உறுதி செய்தார். அதன்பிறகு தான் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தான் அயதுல்லா அலி கமேனியின் மறைவை ஈரான் அரசு தொலைக்காட்சியில் எப்படி அறிவிக்கப்பட்டது என்ற வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த துயர செய்தியை அறிவித்தபோது செய்தி வாசிப்பாளர் மிகவும் எமோஷலானார். அவரது கண்கள் கலங்கி. கண்ணீர் மல்க பாரசீக மொழியில் அவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை ஈரான் உள்பட மொத்த உலகத்துக்கும் அறிவித்தார்.
அப்போது அவர், ‛‛ஹுசைனி போராட்டத்தில் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புக்கு உறுதியான மலைபோல் செயல்பட்டவர். அவர் அன்பு, இரக்கம், உறுதித்தன்மை கொண்டவர்.
இஸ்லாமியர்கள் தலைவரும், இமாமுமான மேன்மைமிக்க அயதுல்லா சையது அலி ஹுசைனி கமேனி உச்ச பரலோ ராஜ்யத்தில் இணைந்தார்'' என்று கூறினார். இதனை கூறும்போது அவரது கண் கலங்கி அழுதார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி!











Click it and Unblock the Notifications