ஈரான் வேண்டவே வேண்டாம்.. கூட்டமாக வெளியேறும் மக்களுக்கு நேர்ந்த கதி! துருக்கி கொடுத்த ஷாக்! பாவம்யா
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து ஈரான் மக்கள் அண்டை நாடான துருக்கிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் 2 நாட்கள் வரை துருக்கி அவர்களை அனுமதிக்காமல் அலைக்கழித்த சம்பவம் நடந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து போர் தீவிரமாகி நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போரின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏனென்றால் ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளது.

தன்னை தாக்கும் இஸ்ரேல் மட்டுமின்றி டிரம்பை பழிவாங்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை தளம், விமானதளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் அட்டாக் நடத்தி வருகிறது.
டிரம்ப் வார்னிங்
இதனால் கோபமடைந்துள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. இதனால் ஈரான் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் இந்த போர் இன்னும் 4 முதல் 5 வாரங்கள் வரை தொடர வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது ஈரான் மக்களுக்கு பெரிய பிரச்சனையை மாறி உள்ளது.
துருக்கிக்கு படையெடுக்கும் மக்கள்
இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து ஈரான் நாட்டை விட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றன. இவர்கள் அண்டை நாடான துருக்கிக்கு செல்கின்றனர். துருக்கியும், ஈரானும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. ஈரானில் பிரச்சனைகள் வரும்போதெல்லாம் ஈரான் மக்கள் துருக்கிக்கு அகதிகளாக செல்வார்கள்.
அந்த வகையில் 5 ஆயிரம் அகதிகளாக உள்ள நிலையில் சுமார் 75 ஆயிரம் ஈரானியர்களுக்கு துருக்கி குடியுரிமை வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடக்கும் போரில் உயிருக்கு பயந்து மார்ச் 1ம் தேதி முதல் ஏராளமானவர்கள் துருக்கி நோக்கி சென்றனர்.
தாமதமாக அனுமதித்த துருக்கி
ஆனால் துருக்கி நேற்று மதியம் வரை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் எல்லையில் தவித்தனர். உயிர் பாதுகாப்புக்காக வந்த அவர்களை துருக்கி அனுமதிக்காததால் நொந்து போயினர்.
சிலர் மீண்டும் ஈரானுக்கே திரும்பினர். ஆனால் ஒரு தரப்பினர் எல்லையிலேயே காத்து கிடந்தனர். இதையடுத்து நேற்று மதியம் தான் ஈரான் மக்கள் துருக்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அகதிகளாக அவர்கள் சென்றனர்.
துருக்கிக்கும், ஈரானுக்கும் இடையிலான கபிகோய் எல்லை வழியாக ஈரான் மக்கள் துருக்கிக்குள் நுழைந்து வருகின்றனர். இதனால் ஈரான் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். அதேபோல் ஈரானில் உள்ள துருக்கி மக்களும், பிற வெளிநாட்டினரும் துருக்கிக்குள் 3வது நாளாக அனுமதிக்கப்பட்டனர்.
அச்சத்தில் மக்கள்
இதுபற்றி ஈரான் தலைநகர் டெஹ்ரானை சேர்ந்தவர் கூறுகையில், ''ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடினமான சூழல் உள்ளது. குண்டுவெடிப்புகள் நிகழ்கிறது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு இல்லை. இருப்பினும் பாதிப்பு வந்துவிடுமோ என மக்கள் அனைவரும் பயப்படுகிறார்கள்.
போர் தொடங்கிய முதல் நாளில் வீட்டுக்கு பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றேன். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. வரும்நாட்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு சிக்கல் வரலாம். இதனால் ஈரானை விட்டு வெளியேறுகிறேன்'' என்றார்.
வீடுகளில் முடக்கம்
அதேபால் துருக்கி எல்லையையொட்டிய காஸ்வின் பகுதியைச சேர்ந்த ஈரானிய அசெரி இனத்தவரான பினாலி கிலிக் கூறுகையில், ''இங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை வா்கின்றனர். ஆனாலும் ராணுவ பகுதிகளில் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் நடப்பது மக்களை பயம் கொள்ள செய்துள்ளது.மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தற்போது வரை உணவு பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. இருப்பினும் பெட்ரோல், டீசல் வாங்க ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் உள்ளனர். இதனால் வரும் நாட்களில் தொலைதூர பயணங்களுக்கு தேவையான எரிபொருட்கள் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications