"இனி ஒரு தவறு செய்தாலும்.. அமெரிக்கா அவ்வளவு தான்.." டிரம்பிற்கு ஈரான் நேரடி எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் சரி, போரைத் தொடர்ந்தாலும் சரி அது தங்களுக்கு கவலை இல்லை என்றும் தக்க பதிலடி கொடுப்போம் எனவும் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்கா தாக்குதல் என்ற தவறை மீண்டும் செய்தால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

மத்ததிய கிழக்கில் கடந்த பல மாதங்களாகவே அமைதியற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. நேரடி மோதல் இல்லை என்றாலும் கூட பதற்றம் தொடர்ந்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சமயம் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்கிறார். இன்னொரு சமயம் போரை முடிவுக்குக் கொண்டுவருவது என மாறி மாறி பேசி வருகிறார்.

Iran Warns US iran US

ஈரான்

இதற்கிடையே ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்துபவருமான முகமது பாகர் காலிபா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். போரும் இல்லை.. அமைதி பேச்சுவார்த்தையும் இல்லை என்ற நிலை இனி நீடிக்காது என அவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய காலிபாப், ஈரான் முன்வைத்துள்ள ஏழு நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான கதவு திறந்திருக்கும் என்றார்.

அமெரிக்கா பேச்சுவார்த்தையை தேர்வு செய்தாலும், போரை தேர்வு செய்தாலும் தங்களுக்கு கவலையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தி தவறு செய்தால் அதன் பிறகு நடக்கும் விஷயங்களுக்கு ஈரான் பொறுப்பாகாது என்றும் எச்சரித்தார்.

மீண்டும் போர் வெடிக்குமா?

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் தொடங்கியது. இதில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், உலகின் முக்கிய எரிசக்தி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

அமைதி ஒப்பந்தம்

பின்னர் ஜூன் 17ஆம் தேதி டிரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனும் போரை முடிவுக்கு கொண்டுவர 14 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால், ஜூலை 8ஆம் தேதி அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாக கூறி, ஒரு வாரத்துக்குப் பிறகு ஈரானும் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தது.

இதற்கிடையே ஈரான் அல்லது ஏமனில் உள்ள ஹவுதி அமைப்புகள் புதிதாக எந்த தாக்குதலையும் நடத்தாவிட்டால், ஈரான் மீதான தாக்குதலை தள்ளிப்போடலாம் என்று டிரம்ப் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள்

கடந்த இரண்டு வாரங்களில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரிடம் டிரம்ப் ஆலோசனை கேட்டுள்ளார். இருவருமே ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த மாதம் தொடக்கத்திலேயே டிரம்ப் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் இருப்பினும் பொருளாதார தடைகள் பலனளிப்பதால் காத்திருக்குமாறு சவுதி பட்டத்து இளவரசர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரத்தில் தாக்குதல் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது என சொல்ல முடியாது. தேவைப்பட்டால் ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த அமெரிக்க ராணுவமும் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் ஏற்கெனவே இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ள நிலையில், இன்னொரு கப்பலும் அங்கு செல்லவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+