டிரம்புக்கு பகிரங்க வார்னிங்.. ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த ஈரான்! வெடிக்கும் 3ம் உலகப்போர்
தெஹ்ரான்: ஈரானுக்குள் வெடித்துள்ள போராட்டம் குறித்து பேசியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரெடி என்று கூறியிருந்தார். இந்த விஷயத்தை ஈரான் லேசில் எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் சண்டை செய்ய தயார் என்று அறிவித்திருக்கிறது.
வெனிசுலாவில் அதிபர் மதுரோவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கிறது. அமெரிக்காவுக்கு உள்ளே கூட இந்த போராட்டங்கள் நடக்கிறது. இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காக டிரம்ப், ஈரானுக்குள் நடக்கும் போராட்டங்கள் குறித்து மட்டும் பேசியுள்ளார்.

உள்நாட்டு விவகாரம்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மாணவர் தலைவர் உமர் காலித் குறித்து, நியூயார்க் மேயர் பேசியதற்கு, மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஏனெனில் இது உள்நாட்டு சமாச்சாரம், இதில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தனர். அதேபோலவே தற்போது ஈரானும், எங்கள் நாட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், டிரம்ப் இதை கண்டுக்கொள்ளவில்லை.
போருக்கு ரெடி
இப்படி இருக்கையில்தான், ஈரான் முக்கியமான ஸ்டேட்மெண்டை கொடுத்திருக்கிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த வெளிநாட்டு தூதர்களுக்கான மாநாட்டில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனாலும், முந்தைய போரை விடவும் அதிகமாக, போருக்குத் தயாராக இருக்கிறோம். நியாயமான, சம உரிமை மற்றும் பரஸ்பர மரியாதை கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்று கூறியிருக்கிறார்.
ஈரானில் வெடித்த போராட்டம்
ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு. அந்நாட்டின் தலைவராக கமேனி இருக்கிறார். அமெரிக்க விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக, ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஈரானின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் சரிந்துள்ளது. எனவே இதற்கு எதிராக வியாபாரிகள், மக்கள் கிளர்ந்தெழ தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் தற்போது அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றப்பட்டு வருகிறது.
வழக்கமான பாணி
குறிப்பாக இந்த போராட்டங்களில் வலதுசாரி, அமெரிக்க ஆதரவாளர்கள் தலைமையேற்று நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி நடப்பது புதிய விஷயம் கிடையாது. தங்களுக்கு பிடிக்காத நாடுகளில் ஆட்சிக்கவிழ்ப்பை மேற்கொள்ள, அமெரிக்கா இப்படி வழக்கமாக செய்யும். அந்த வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
தலைக்கீழாகத்தான் குதிப்போம்
ஈரானில் நடக்கும் போராட்டங்களை ஒடுக்க, அந்நாட்டு அரசு கையாளும் ராணுவ வன்முறையை தடுக்க நாங்கள் மூக்கை நுழைப்போம் என டிரம்ப் வார்னிங் கொடுத்திருந்தார். இதற்கான ராணுவ திட்டங்கள் குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார். இதற்குதான் ஈரான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு ரெடி. இல்லை.. போர்தான் வேண்டும், தலைக்கீழாகத்தான் குதிப்பேன் என்று சொன்னாலும், நாங்கள் அதற்கு ரெடி என்று ஈரான் காட்டமாக பதிலளித்துள்ளது.
பஞ்சாயத்து பேசும் ஓமன்
இப்படியான சலசலப்புகள் கிளம்பும் போதெல்லாம், ஓமன் பஞ்சாயத்து பேச உள்ளே வரும். அந்த வகையில் இந்த முறையும், பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என ஓமன் கூறியிருக்கிறது. மறுபுறம் ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் டென்ஷன் ஆன ஈரான்.. இந்நாட்டு தூதர்களை நேரில் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் ஒருவேளை போர் வெடித்தால் பிரச்சனை மோசமாக மாறும். முதலில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். இதனால் பணவீக்கம் உயர்ந்து, பங்கு சந்தைகள் அடிவாங்கும். இந்தியாவுக்கு எண்ணெய் கிடைப்பது குதிரை கொம்பாக மாறும். கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கும். அதேபோல, மத்திய கிழக்கில் வேலை பார்த்து வரும் இந்தியர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இந்த போரில் ரஷ்யாவும், சீனாவும் தலையிட்டால்.. அது உலகப்போராகவும் மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications