இஸ்ரேலுக்கு தான் சேதாரம்.. எங்ககிட்ட இருக்கு ஆதாரம்! நாங்க தான் வல்லரசு.. ஈரான் வெளியிட்ட வீடியோ..!
தெஹ்ரான்: ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதில் அடி கொடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், தங்கள் தாக்குதலால் தான் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என வீடியோக்களை வெளியிட்டுள்ளது ஈரான் ராணுவம். மேலும் பழைய வீடியோக்களை வைத்து ஈரானுக்கு எதிராக சில ஊடகங்கள் தவறான செய்தி பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் காசாவில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. காசாவில் அப்பாவி மக்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்கு இடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹைத்தி, சிரியாவின் ஷியா போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்திய தாக்குதலில் பல உயிரிழந்தனர். குறிப்பாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் தளபதிகளும் ட்ரோன் தாக்குதலில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதனால் வெகுனெடெழுந்த ஈரான் கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 150-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் விழுந்ததால் இஸ்ரேல் திணறி போனது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் ஈரானின் தாக்குதல் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியிருந்தது. இந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில சொன்னது போலவே ஈரான் மீது இஸ்ரேல் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஈரான் தலைநகர் டெக்ரான் மற்றும் கராஜ் நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஒரே நேரத்தில் சீறிப் பாய்ந்தன. இந்த நிலையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையங்களை குறி வைத்து மட்டுமே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் தங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலின் ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாகவும், ஏவுகனை தாக்குதலில் மட்டுமல்ல, வான் பாதுகாப்பிலும் தாங்கள் தான் வல்லரசு என ஈரான் கூறி இருக்கிறது.

மேலும் கடந்த ஒன்றாம் தேதி தங்கள் நாட்டு ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்த வீடியோக்களை பகிர்ந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், தங்கள் தாக்குதலால் தான் இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என வீடியோ பதிவிட்டு இருக்கிறது. மேலும் சில சர்வதேச ஊடகங்கள் சில தெஹ்ரான் சுத்திகரிப்பு மையத்தின் வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றன. ஆனால் அது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்டதாகவும், சில இடங்களில் குண்டு வெடிக்கும் வீடியோக்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் வீடியோக்கள் என கூறியுள்ளது.

-
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா?











Click it and Unblock the Notifications