'ஹிஜாப் அணிய முடியாது’.. ஈரானில் போராட்டத்தில் குதித்த பெண்கள்.. வலுக்கும் எதிர்ப்பு! என்னாச்சு?
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதாக தெரிவித்து வரும் நிலையில், இதற்கு பெண்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈரான். கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய நாடு என்பதால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அதன்படி, 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

ஹிஜாப் கட்டாயம்
எனினும், ஈரானை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கொள்கைகளுக்கு ஏற்ப இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதில் மென்மை காட்டப்படுகிறது. தற்போது ஈரானில் அதிபராக இருக்கும் இப்ராஹிம் ரெய்சி பழமைவாத கொள்கைகளில் தீவிர பற்றுடையவர். இதனால், அங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது போன்ற இஸ்லாமிய சட்டங்களின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரானில் கடந்த 12-ந் தேதி ''ஹிஜாப் தேசிய தினம்" கடைபிடிக்கப்பட்டது. ஒருவாரத்திற்கு பெண்கள் ஹிஜாப் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரங்கள் அரசு சார்பில்

பெண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
ஈரான் அரசும் கடந்த சில மாதங்களாகவே பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயம் ஆக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அங்குள்ள பெண் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹிஜாப் தொடர்பான தேசிய தினத்தை முன்னிட்டு ஜூலை 12-ந் தேதி இஸ்லாமிய பெண்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் பொது வெளியில் ஹிஜாப் அகற்றியதோடு அது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஹிஜாப் அணிவதன் முக்கியத்துவம்
அதேவேளையில், ஈரானிய அரசு ஊடகங்கள் 'ஹிஜாப்' அணிவதற்கு ஆதரவான பிராசரத்தை முன்னெடுத்து அது தொடர்பான காட்சிகளை வெளியிட்டன. குர் ஆனில் ஹிஜாப் அணிவதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாகவும் பெண்கள் ஏன் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய வேண்டும் என்பது குறித்த பிரசாரங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தன.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஈரானின் வடகிழக்கு நகரில் உள்ள மஷாத் நகர துணை வழக்கறிஞர் ஒருவர், பெண்கள் ஹிஜாப் அணியாமல் வங்கிகளுக்கோ பிற பொது இடங்களுக்கோ செல்லக்கூடாது என்றார். இதற்கு அந்நகரத்தின் மேயர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் இறுதியில் அனுமதி கொடுத்து உத்தரவிட்டார்.

நிராகரித்த ஈரானிய செய்தி ஊடகம்
அதன்பிறகே, கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக பெண் ஆர்வலர்களும் சிவில் சமூகத்தினரும் தீவிரமாக வலியுறுத்த தொடங்கினர்.
ஈரானில் செயல்பட்டு வரும் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஹிஜாப் கட்டாயம் என்பதற்கு எதிரான பிரசாரங்களை சமூக ஊடகங்களில் முன்னெடுத்துள்ளன. #hijab_without_hijab என்ற ஹேஷ்டேக்கும் அன்றைய தினம் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகி இருந்தது. எனினும், இந்த தகவல்களை முற்றிலும் நிராகரித்த ஈரானிய செய்தி ஊடகம், ஈரானில் ஒழுக்கமின்மையை ஊக்குவிக்க இத்தகைய எதிர்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications