ஈரான் போரில் உள்ளே வரும் சீனா, ரஷ்யா.. மறைமுக உதவி? கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!
டெல் அவிவ்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே இந்த தாக்குதலில் ஈரான் பயன்படுத்திய ஒரு வகை வெடிகுண்டுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவின் கனெக்ஷன் இதில் இருக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இஸ்ரேல்- அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது போரை ஆரம்பித்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால், இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியது.

க்ளஸ்டர் குண்டுகள்
ஏனென்றால் ஈரான் இந்த போரில் முதல்முறையாக cluster munitions என்ற வகை குண்டுகளைப் பயன்படுத்தியது. இது ஈரானின் அதிநவீன ஆயுதத் திட்டத்தில் ரஷ்யா, சீனாவின் பங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி மத்திய இஸ்ரேலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த ஏவுகணை, வெறும் 8 கி.மீ. சுற்றளவில் 20 குண்டுகளை வீசி தாக்கியது.. இதில் 12 பேர் காயமடைந்ததுடன், அஸோர் வீடுகளும் சேதமடைந்தன.
சரியாக வெடிகுண்டு தாக்கிய இடத்திற்கு 7 கிமீக்கு மேல், இது ஏழு குண்டுகளாகப் பிரிந்தது. இந்த வகை வெடிகுண்டுகள் எப்போதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், அவை வெடிக்காமல் இருந்தாலும் கண்ணிவெடிகளைப் போல ஆபத்தானதாகவே இருக்கும். இந்த வகை வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஏன் ஆபத்து!
இந்த வகை குண்டுகள் தாக்க வேண்டிய இடத்திற்கு அருகே வந்தபிறகு, சிறிய வெடிபொருட்களைச் சிதறும். வெடிக்காத குண்டுகளும் கண்ணிவெடிகளாய் இருக்கும். அவை எப்போது வேண்டுமானாலும் வெடித்து சேதத்தைப் பெரிதாகிறது. ஈரான் இதற்கு முன் 2025 ஜூன் மாதம், 2,000 கி.மீ. வரம்புள்ள 'ஸோல்ஃபாகர்', 'காதர்', 'கோரம்ஷார்' ஏவுகணைகளில் இவற்றைப் பயன்படுத்தியுள்ளது. இதில் 'கோரம்ஷார்' 80 குண்டுகளைக் கொண்டு செல்லக்கூடியதாகும்.
ரஷ்யா
ஈரானின் ஆயுத விஞ்ஞானிகள் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட நிலையில், எப்படி ஈரானில் இந்த குண்டுகளை தயாரிக்க முடிந்தது என்பதே பலருக்கும் எழுந்துள்ள கேள்வி. இந்த இடத்தில் தான் மற்ற நாடுகளின் உதவி கிடைத்திருக்குமோ என இஸ்ரே் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் பங்கு சந்தேகிக்கப்படுகிறது. உக்ரைன் போர் சமயத்தில் ட்ரோன் பரிமாற்றங்கள் மூலம் ரஷ்யா ஈரான் உறவுகள் வலுப்பெற்றன. ஈரானிடம் ரஷ்ய KMGU டிஸ்பென்சர்கள் மற்றும் கொத்தாக வெடித்துச் சிதறும் க்ளஸ்டர் குண்டுகளான 'கியாம்' ஏவுகணைகள் உள்ளன.
சீனா
அதேபோல சீனாவுக்கும் இதில் பங்கு இருக்கமோ என்ற சந்தேகமும் எழவே செய்கிறது சீனாவின் பெய்ஜிங்கின் BRI திட்டத்தில் ஈரானுடன் ராணுவத் தொடர்புகளும் இருக்கிறது. இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் ஈரானின் 'காதர் எஸ்' (Qadr S) கொத்துக் குண்டு திறனுடன் பொருந்திப் போகின்றன. இவை வெளிப்படையாக இல்லை என்றாலும், ஏதோ தொடர்பு இருக்குமோ என்ற வலுவான சந்தேகத்தை எழுப்பவே செய்கிறது.
ஈரான் 'ஃபதே' (Fateh) ரக க்ளஸ்டர் குண்டுகளை (30 குண்டுகள்) தயாரிக்கிறது. இருப்பினும், இது மிகவும் சிக்கலான ஒரு தொழில்நுட்பம்.. இதை ஈரான் சொந்தமாக உருவாக்கி இருக்கக் கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்பதே அவர்கள் கருத்தாகும். ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள சூழலில் மற்ற நாடுகளிடம் இருந்து ஈரான் ஆயுதங்களைப் பெற வாய்ப்பில்லை. எனவே சுற்றிச் சுற்றி சீனாவும் ரஷ்யாவுமே வந்து நிற்கிறது.
இஸ்ரேல் பிரச்சினை
இஸ்ரேலிடம் ஏவுகணை தாக்குதல்களைச் சமாளிக்க 'ஐயன் டோம்' இருந்தாலும் கூட, க்ளஸ்டர் குண்டுகளை ஐயன் டோமால் கூட சமாளிக்க முடியாது. நடுவானில் இடைமறிக்கும்போது, குண்டுகள் கணிக்க முடியாத வகையில் சிதறி சேதம் விளைவிக்கலாம். இதுவே க்ளஸ்டர் குண்டுகளை மிகவும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது. உலகளவில் 111 நாடுகள் (2008 ஒப்பந்தம்) கொத்து குண்டுகளைத் தடை செய்துள்ளன. ஆனால் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இதில் இல்லை. 2023இல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய க்ளஸ்டர் குண்டுகள் அப்போது பெரும் சர்ச்சையை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் ஈரானின் க்ளஸ்டர் வெடிகுண்டு பயன்பாடு மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தத் தாக்குதலில் ரஷ்யா மற்றும் சீனாவின் பங்கு இருக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.
-
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை!












Click it and Unblock the Notifications