ஹர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்த புதிய யுக்தி! வியூகத்தை மாற்றிய ஈரான்! சுப்ரீம் லீடர் கொடுத்த மெசேஜ்!
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நடத்திய தாக்குதலுக்கு நிச்சயம் பழி வாங்குவோம் என்று ஈரானின் புதிய சுப்ரீம் லீடர் மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஹர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.
தற்காலிகப் போர்நிறுத்தக் காலத்திலும் பின்வாங்கப்போவதில்லை என மோஜ்தபா கமேனி அறிவித்துள்ளார். மறைந்த தலைவர் அலி கமேனி மற்றும் மோதலில் உயிரிழந்தவர்களுக்காகப் பழிவாங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு எதிரான ஈரானின் முக்கிய வியூகமான ஹார்முஸ் நீரிணை நிர்வாகத்தில் அணுகுமுறையை தீவிரப்படுத்துவதாக மொஜ்தபா அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். "தாக்குதல்களுக்கு ஈரான் நிச்சயம் பழிவாங்கும். நாங்கள் நீரிணையின் கட்டுப்பாட்டு நிர்வாகத்தை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்வோம்," என்று கூறியிருக்கிறார்.
இந்த பாதையில் கப்பல் போக்குவரத்து மீதான அழுத்தம் தொடரும். அடுத்த நகர்வுக்கு முன் அண்டை நாடுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும் மோஜ்தபா சுட்டிக்காட்டினார். "தெற்கு அண்டை நாடுகளிடமிருந்து உரிய எதிர்வினைக்காகக் காத்திருக்கிறோம், அப்போதுதான் எங்கள் சகோதரத்துவத்தைக் காட்ட முடியும்," என்றார்.
அதாவது சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்த விஷயத்தில் யார் பக்கம் நிற்கிறது? என்கிற கேள்வியை மோஜ்தபா எழுப்பியிருக்கிறார். இது நல்லுறவை வெளிப்படுத்த வேண்டிய நேரம் என்றும் கூறியிருக்கிறார்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்!












Click it and Unblock the Notifications