உயிர் தப்பிய பல நூறு வீரர்கள்.. அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்.. ஈரான் ஏமாந்த கதை!
ஈரான் அமெரிக்கா படைத்தளம் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க வீரர்களுக்கு முன்பே தெரியும், ஈராக் இதுகுறித்த உளவுத்தகவல்களை முன்பே அமெரிக்காவிற்கு கூறிவிட்டது என்ற உண்மை வெளியாகி உள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: அமெரிக்கா படைத்தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் குறித்து அமெரிக்க வீரர்களுக்கு முன்பே தெரியும், ஈராக் இதுகுறித்த உளவுத்தகவல்களை முன்பே அமெரிக்காவிற்கு கூறிவிட்டது என்ற உண்மை வெளியாகி உள்ளது.
நேற்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மொத்தம் 12 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. மொத்தம் இரண்டு ராணுவ தளங்கள் இப்படி தாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இர்பில், அல் அசாத் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. இரண்டுமே அமெரிக்காவின் படை வீரர்கள் அதிகம் இருக்கும் ஈராக் பகுதி ஆகும்.

என்ன மரணம்
சுலைமானி மரணத்திற்கு எப்படியாது பழிவாங்க வேண்டும் என்றுதான் ஈரான் இப்படி ஒரு தாக்குதலை நடத்தியது. குறைந்தது 10 வீரர்களையாவது கொல்ல வேண்டும். அமெரிக்காவிற்கு ரத்தத்தின் சுவையை கொடுக்க வேண்டும் என்று ஈரான் முயற்சி செய்தது. சுலைமானி மகள் செய்னப் சுலைமானி கூட இதைத்தான் குறிப்பிட்டு இருந்தார்.

இல்லை
ஆனால் ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் அதிசயமாக ஒரு ராணுவ வீரர் கூட பலியாகவில்லை. எந்த போர் வாகனமும், போர் விமானமும் அழிக்கப்படவில்லை. வெறும் தரையில் வெடிகுண்டு வீசியது போல எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

என்ன சண்டை
இந்த சண்டையில் ஈரான் - அமெரிக்கா இடையில் ஈராக் மாட்டிக்கொண்டு இருக்கிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்த வசதியாக ஈராக் அமெரிக்க படைகளுக்கு இடம் கொடுத்துள்ளது. அமெரிக்கா மீது ஈராக் பயம் கலந்த நட்பு கொண்டு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஈராக் ஏன்
அதே சமயம் இன்னொரு பக்கம் ஈரான் ஈராக் இடையேயும் நல்ல உறவு உள்ளது. ஈராக்கில் உள்ள ஒரு குழு ஈரான் அரசுக்கு ஆதரவு அளிக்கிறது. அதவாது இங்க ஒரு குத்து.. அங்க ஒரு குத்து கதைதான். இவர்களை பார்க்க செல்லும் போதுதான் அன்று சுலைமானி கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அரசு
ஈராக் அரசு அமெரிக்கா உடன் தொடர்பு வைத்து இருந்தாலும், ஈராக் அரசுக்கு உள்ளேயே நிறைய கருப்பு ஆடுகள் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்தான் அமெரிக்க வீரர்கள் நேற்று அதிகாலை நடந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க காரணம் என்கிறார்கள்.

என்ன நடந்தது
ஈராக் அரசில் இருக்கும் முக்கிய நபர்கள் சிலர் அமெரிக்கா உளவு அதிகாரிக்கு ஈரான் தாக்குதல் குறித்து முதல் நாள் இரவே தகவல் அனுப்பி உள்ளனர்.
எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ வெளியேறுங்கள் என்று கூறி உள்ளனர்.
ஈராக்கில் இர்பில், அல் அசாத் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது.இந்த இடங்களில்தான் ஈரான் தாக்கும் என்றும் உளவு தகவல்களை ஈராக் அமெரிக்காவிடம் கொடுத்துள்ளது .
இதனால் உடனடியாக அங்கிருந்த அமெரிக்க படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

மரணம் இல்லை
இதனால்தான் நேற்று நடந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை. இல்லையென்றால் பல நூறு வீரர்கள் பலியாகி இருப்பார்கள். ஒரு வகையில் ஈரான் ஈராக்கிடம் ஏமாந்துள்ளது. சொந்த பங்காளியே பகையாளியாக செயல்ப்பட்டு ஏமாற்றியது அந்நாட்டை கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஈராக் எப்படி
அதோடு மிக முக்கியமாக, ஈராக் இந்த தாக்குதல் காரணமாக கெட்டபெயர் வாங்கி இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இது அமெரிக்காவிற்கு ஒரு வகையில் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications