பெண்கள் திருமண வயது 9.. தீவிரம் காட்டும் ஈராக்! குறைந்த வயது திருமணத்தை அனுமதிக்கும் நாடுகள்! லிஸ்ட்
பாக்தாட்: ஈராக் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 9 ஆக குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. பழமைவாத குழுவினர் பெரும்பான்மையாக நாடாளுமன்றத்தில் உள்ளதால், இந்த சட்ட திருத்தம் எளிதில் நிறைவேறும் என சொல்லப்படுகிறது. பெண்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக சட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈராக். 46 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈராக், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டில் இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையான பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 9 ஆக குறைக்க முடிவு செய்து அதை சட்டமாக்க அரசு முடிவு செய்தது.

இதற்கான சட்ட முன்மொழிவு கடந்த ஆகஸ்ட் மாதமே மேற்கொள்ளப்பட்டது. ஈராக்கின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் இதை கண்டு கொள்ளாத ஈராக் அரசு சட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. குடும்ப விவகாரங்களில் மத அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இளம் பெண்களை "ஒழுக்கமற்ற உறவுகளில்" இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதாக ஈராக்கின் ஆளும் கட்சி கூறுகிறது. ஈராக்கில் ஷியா பழமைவாத குழு பெரும்பான்மை வகிப்பதால், இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என சொல்லப்படுகிறது. குடும்ப விவகாரங்களை மத ரீதியிலான நீதி அமைப்புகள் கையாளவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
ஈராக்கில் இந்த சட்டம் நிறைவேற்ற கடும் எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. பெண்களின் உரிமைகளை நசுக்கும் வகையில், இந்த சட்டம் இருப்பதாகவும், இளம்பெண்களை பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் இந்த புதிய சட்டம் அமைந்து இருப்பதாக எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.
ஈராக்கில் பிரதமராக முகமது ஷியா அல் சுடானி உள்ளார். தற்போது, பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக ஈராக்கில் உள்ளது. ஆனாலும் இது முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. கடந்த 1950-ல் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்ட போதிலும், 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக, ஐநாவின் குழந்தைகள் நலனுக்கான அமைப்பு கூறியுள்ளது.
மலேசியாவிலும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 16 ஆக உள்ளது. பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. பிரேசில், சிலி ஆகிய நாடுகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது16 ஆகும். பாகிஸ்தானில் பெண்களுக்கு 16 வயதும், ஆண்களுக்கு 18 வயதும் திருமணத்திற்கான குறைந்தபட்ச சட்டபூர்வ வயதாக உள்ளது. வடகொரியாவில் பெண்களுக்கு 17 வயதாகவும் ஆண்களுக்கு 18 வயதாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications