1,700 ஈராக் ராணுவ வீரர்களுக்கு 'மரண தண்டனை' கொடுத்துவிட்டோம்: சதாம் ஆதரவுப் படை அறிவிப்பு
திக்ரீத்: ஈராக் ராணுவத்தின் 1,700 வீரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டோம் என்று சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது.
ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., மொசூல், திக்ரீத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
கைப்பற்றப்பட்ட நகரங்களில் இருந்து மக்களையும் வெளியேற்றி வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை அப்படியே கைவிட்டுவிட்டு ஈராக் ராணுவ வீரர்கள் சாதாரண உடையில் தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற நிலையில் பாக்தாத் நோக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஏற்கெனவே பெர்சியா வளைகுடா பகுதிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் தங்களிடம் பிடிபட்ட ஈராக் ராணுவ வீரர்கள் 1700 பேருக்கு மரண தண்டனை விதித்துவிட்டோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்கிறது ஈராக் அரசு. இது தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications