மனைவியுடன் உடலுறவு முடிந்த 10வது நிமிடத்தில் ஞாபக மறதி.. கணவர் கேட்ட "அந்த" கேள்வி.. மனைவி பகீர்
லைம்ரிக்: மனைவியுடன் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து அனைத்தையும் மறக்கும் சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.
வயது ஆக ஆக ஒருவருக்கு மறதி ஏற்படும் என்பார்கள். அது போல் சிலர் தூக்கமின்மைக்கு பயன்படுத்தும் மருந்துகளாலும் ஞாபக மறதி ஏற்படும்.
சிலர் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மறந்துவிடுவார்கள். அவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த வகையில் அயர்லாந்தில் முதியவர் ஒருவர் குறுகிய கால ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்.

66 வயது முதியவர்
அயர்லாந்தை சேர்ந்த 66 வயது முதியவர், தனது மனைவியுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து போனை எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே மனைவியை அழைத்து நேற்று நமக்கு திருமண நாள், நான் அதை மறந்து கொண்டாடாமல் இருந்துவிட்டேன்.

உணவு
நீயாவது நினைவுப்படுத்தியிருக்கலாமே என்றார். அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவர் குறிப்பிட்ட அந்த நாளன்று திருமண நாளை அந்த முதியவர் ஜெகஜோதியாக கொண்டாடி , வெளியே உணவு சாப்பிட்டு குடும்பத்தினருடன் குதூகலமாக இருந்துள்ளனர்.

முதியவர்கள்
ஆனால் இந்த சம்பவங்கள் எல்லாமே அந்த முதியவருக்கு மறந்து போய்விட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போதுதான் அவர் டிரான்சிட் குளோபல் அம்னீஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது இது ஒரு குறுகிய கால ஞாபக மறதி நோய்.

50 முதல் 70 வயது பிரிவினர்
இந்த அரிய நோயானது 50 முதல் 70 வயதுக்குள்பட்டவர்கள் இடையே தான் பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நபருக்கு ஏற்கெனவே கடந்த 2015 ஆம் ஆண்டும் இதே போல் மனைவியுடன் உடலுறவு கொண்ட 10 நிமிடம் கழித்து குறுகிய கால ஞாபக மறதி ஏறபட்டு உடனே சரியாகிவிட்டது. இது போல் குறுகிய கால ஞாபக மறதி உள்ளவர்கள் தங்களுடைய பெயர், வயது, குடும்பம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை எக்காரணத்தை கொண்டும் மறக்க மாட்டார்கள் என்பது சற்று நிம்மதி பெருமூச்சு விடும் விஷயமாகும்.












Click it and Unblock the Notifications