ஆஸ்கர் விருதை புறக்கணித்தார் ‘சேல்ஸ் மேன்’ திரைப்பட இயக்குநர் ஃபர்ஹாடி
அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஈரான் நாட்டு இயக்குநர் ஃபர்ஹாடி புறக்கணித்தார்.
லாஸ்ஏஞ்சல்ஸ்: 'சேல்ஸ் மேன்' திரைப்படத்திற்கு சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதை வாங்காமல் புறக்கணித்தார் இயக்குநர் ஃபர்ஹாடி.
உலக திரைப்படத் துறையின் மிகப் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது. 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் இந்த விருதுகளில், அயல்மொழி திரைப்படத்திற்கான விருதும் ஒன்று. இந்தப் பிரிவில் ஈரான் மொழித் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

சேல்ஸ் மேன்
அயல்மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை ஈரான் நாட்டு படம் ‘சேல்ஸ் மேன்' திரைப்படம் தட்டிச் சென்றது. ஈரான் நாட்டு அமெரிக்கா என்றால் பிரச்சனை இல்லாமல் இருக்குமா? அதுவும் அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் போது இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நெருக்கடி இல்லாமலா இருக்கும்?

ஆஸ்கர் விருது புறக்கணிப்பு
ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர் வர தடை விதித்திருப்பது மனிதகுலத்துக்கு எதிரானது என்று கூறி ஆஸ்கர் விருதினை ஆஸ்கர் விருதை புறக்கணித்துள்ளார் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஃபர்ஹாடி.

ஃபர்ஹாடி விமர்சனம்
அமெரிக்காவுக்குள் ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், விருது வழங்கும் விழாவில் அந்த படத்தின் இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹாடி கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அவர் அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவுக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை மனித குலத்துக்கு எதிரானது என்று அவர் விமர்சித்தார்.

டிரம்ப்பின் அடாவடி
வேலைவாய்ப்புகள் முதல் அனைத்து துறைகளிலும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற கருத்தினை முன்வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க 90 நாட்கள் தடை விதித்து உத்தரவிட்டார். அவரின் இந்த உத்தரவுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘சேல்ஸ் மேன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆஸ்கரை புறக்கணித்தார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications