அதிர்ச்சி.. உங்களுக்கு "ஓ பிளட் குரூப்"பா.. அப்போ கொரோனா தாக்கும்.. கொஞ்சமா.. அமெரிக்கா ஆய்வு பகீர்
ஓ பிளட் குரூப் நபர்களை கொரோனா தாக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதாவது ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களை கொரோனா அத்தனை சீக்கிரம் அண்டாதாம்.. இந்த கண்டுபிடிப்பால் புது சலசலப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதை முழுமையாக நம்ப வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
23andMe இந்த மரபணு ஆய்வு நிறுவனம்தான் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் இது. ரத்த வகைக்கும், கொரோனா பரவலுக்கும் தொடர்புண்டா என்று இது ஆய்வு மேற்கொண்டது. இதில்தான் சில ஆச்சரியகரமான முடிவுகள் தெரிய வந்ததாம்.

அதாவது ஓ குரூப் ரத்த வகை கொண்டவர்களை கொரோனா தாக்குவது குறைவாக இருக்கிறதாம். பிற ரத்த வகையினரை விட ஓ குரூப் ரத்த வகையினருக்கு இதில் ஓரளவு நிவாரணம் கிடைக்கிறதாம்.
மரபணு ரீதியாக கொரோனா பரவலுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சிலருக்கு மட்டும் ஏன் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை, சிலருக்கு ஏன் உடனடியாக மரணம் சம்பவிக்கிறது என்பது உள்பட பல்வேறு காரணிகளைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் இந்த ஆய்வு தொடங்கியது.
உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரின் மாதிரிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில் ரத்த வகை தொடர்பாக சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட ஏழரை லட்சம் பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்துப் பார்த்ததில் ஓ குரூப் ரத்த வகையினரை கோவிட் 19 வைரஸ் தாக்குவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளதாம்.
இத்தாலி, ஸ்பெயினில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் ரத்த வகையைப் பரிசோதித்ததில், பாதிப்புக்குள்ளானோரில் 50 சதவீதம் பேர் ஏ வகை ரத்தப் பிரிவினராம். இதேபோன்ற ஒரு ஆய்வை சீனாவும் முன்பு நடத்தி இதே போன்ற முடிவை வெளியிட்டிருந்தது நினைவுகூறத் தக்கதது என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.
மற்ற பிரிவினருடன் ஒப்பிடுகையில், ஓ பிரிவைச் சேர்ந்தவர்களை கொரோனா தாக்குவது என்பது 9 முதல் 18 சதவீத அளவே உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது முதல் கட்ட ஆய்வுதான்.. இன்னும் நிறைய ஆராய வேண்டியுள்ளது. அதன் இறுதியில்தான் உறுதியான ஒரு தெளிவு ஏற்படும் என்று ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த ஆய்வு முடிவை முழுமையாக ஏற்க முடியாது. இதுகுறித்து இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான முடிவும் தெரியவில்லை என்று இந்திய டாக்டர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து டாக்டர் கே.கே.அக்ரவால் என்பவர் கூறுகையில், கொரோனாவைரஸுக்கும், ரத்த வகைக்கும் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. புதிய வகை வைரஸ் தாக்கம் வரும்போது ஆய்வுகள் நடைபெறுவது இயல்புதான்.
Recommended Video
இருப்பினும் ஓ வகை ரத்த பிரிவினரை மட்டும் கொரோனா குறைவாக தாக்குகிறது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. காரணம் இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மாதிரி மிகவும் குறைவு. வெறும் ஏழரை லட்சம்தான். எனவே இதை நம்பி, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று ஓ வகை ரத்தப் பிரிவினர் நினைத்து விடக் கூடாது. எப்போதும் போலவே கவனமுடன் அவர்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றார் அக்ரவால்.












Click it and Unblock the Notifications