பவரால வரலை..துபாய் பண்ண தவறால வந்தது?ஒரே நாளில் ஒரு வார மழை! தத்தளிக்கும் நகரம்..தடுமாறும் மக்கள்..!
துபாய்: மிகப்பெரிய பொருளாதார நாடான ஐக்கிய அமீரகம் ஒரே நாளில் பெய்த மழை காரணமாக வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகளில் எங்கு பார்த்தாலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பலி எண்ணிக்கையும் அச்சத்தை தூண்டுவதாக உள்ளது. இந்த பேய் மழைக்கு என்ன காரணம்? இயற்கையை மீறிய மனித செயல்பாடுகளால் தான் துபாய் தத்தளிக்கிறதா? விரிவாக பார்க்கலாம்..
பாலைவன தேசமான ஐக்கிய அரபு அமீரகத்தில் எப்போதும் வெயில் சுட்டெரிக்கும். இதனால் அவ்வப்போது செயற்கை மழையை வரவழைத்து நகரில் வெப்பநிலையை சமணில் வைக்க அவ்வப்போது முயற்சிகள் நடக்கும்.

இந்த நிலையில் தான் நேற்று ஒரே நாளில் பெய்த வரலாறு காணாத கனமழையால் துபாய் நகரமே தத்தளித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களது சேமிப்பை ஒரே நாளில் தொலைத்து விட்டு தவிக்கும் நிலையும் அரங்கேறி இருக்கிறது.
துபாயில் மழை: 165 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்த நிலையில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது தான் இந்த வெள்ளத்திற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். கனமழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையானது கடல் போல காட்சி அளிப்பதால் பல நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் துபாய் மால், எபிரேட்ஸ் மால் ஆகிய வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்ததோடு துபாய் மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தத்தளிக்கும் நகரங்கள்: துபாய் விமான நிலையத்தில் மழைமாணியில் பதிவான அளவின்படி பத்து மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. அரேபிய தீபகற்பத்தை கடந்து சென்ற ஒரு புயலே இந்த மழைக்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில் அது தற்போது ஓமன் வளைகுடாவில் நிலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. துபாயில் இதுவரையில் இல்லாத அளவு மழை பெய்ய என்ன காரணம் என ஆய்வாளர்கள் பலர் பலவித கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும் செயற்கை மழை தான் இந்த பெருமழைக்கு காரணம் எனவும் தற்போது ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேக விதைப்பு: இதுகுறித்து துபாய் வானிலை நிபுணர் அஹ்மத் ஹபீப் கூறும் போது," ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால், துபாயில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, ஓமனில் உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளது . அங்கும் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், சாலைகள், வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. UAE முழுவதிலும் உள்ள பள்ளிகள், புயலுக்கு முன்னதாகவே மூடப்பட்ட நிலையில், அரேபிய நாடுகள் அனைத்திலும் பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மனித தவறு: மேலும் இதற்கெல்லாம் இயற்கையில் ஏற்பட்ட மனித தலையீடு தான் காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் ஆய்வாளர்கள். ஐக்கிய அமீரக தேசிய வானிலை மையம் , கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அல் ஜன் விமான நிலையத்திலிருந்து செயற்கை மழையை வரவழைக்கும் விமானங்களை அனுப்பி வெப்பச்சலன மேக அமைப்புகளை தூண்டி விட்டதன் காரணமாகவே இந்த மழை பெய்திருப்பதாக கூறுகிறார் சிறப்பு வானிலை ஆய்வாளரான அஹமத் ஹபீப். இது முழுக்க முழுக்க மனித தவறு தான்..
More than a year's worth of rain plunges DUBAI unleashing immense flashflood. Airport, metro stations, malls, roads, businesses are inundated with flood waters
— Karnataka Weather (@Bnglrweatherman) April 16, 2024
Dubai International Airport recorded about 160mm of rain in the last 24 hours which is nearly 1.5 yrs avg rainfall in a… pic.twitter.com/dqIBPZlYhT
இயற்கை பேரழிவு: மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெய்த மழையை தொடர்ந்து பல புயல்கள் ஏற்பட்ட நிலையில் இந்த மழைக்கு புயல் மட்டுமே காரணம் அல்ல எனவும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஏழு முறை செயற்கை மழையை உருவாக்கும் சிறப்பு விமானங்கள் மேகங்களை தூண்டியதால் இந்த மழை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் மேக விதைப்பு மற்றும் ஜியோ இன்ஜினியரிங் காரணமாகத்தான் இந்த மழை ஏற்பட்டுள்ளதாகவும் இயற்கையில் மனித தலையீடு இயற்கை பேரழிவுக்கு காரணாகியுள்ளதாகக் கூறுகின்றனர் வானிலை நிபுணர்கள்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications