ஆப்கனை தாக்கியதா நம் ஏவுகணை? பாகிஸ்தான் பரப்பிய தகவல்... இந்தியாவுடன் சேர்ந்து தாலிபான்கள் பதிலடி
காபூல்: எங்களை நோக்கி குறிவைத்து இந்தியா ஏவிய ஏவுகணை ஆப்கானிஸ்தானை தாக்கி உள்ளதாக பாகிஸ்தான் தகவல்களை பரப்பியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களின் பாதுகாப்பு துறையும், நம் நாடும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த புதன் கிழமை முதல் 4 நாட்களாக தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு நம் படை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதையடுத்து நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்கள் ஏவுகணைகளை ஏவி நாம் அழித்தோம். இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் என்பது அதிகரித்தது. இதையடுத்து நேற்று பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு சம்மதம் தெரிவித்தது.
இதனால் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது. இதற்கு நம் நாடும் உரிய முறையில் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் ஒரு தகவலை பரப்பியது. அதாவது பாகிஸ்தானை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை ஆப்கானை தாக்கி உள்ளதாக தகவலை பரப்ப தொடங்கியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை போய் கொண்டுள்ளது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் நம் நாட்டுடன் நட்பாக உள்ளது. கடந்த சில மாதங்களாக நமக்கும், தாலிபான் அரசுக்கும் இடையேயான பந்தம் என்பது அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தானை தாக்கியதாக கூறிய பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதயதுல்லா கவாரிஸ்மி விளக்கம் அளித்துள்ளார். ஹியரியாத் ரேடியோவில் அவர் கூறுகையில், ‛‛எங்களின் மண்ணில் இந்தியாவின் ஏவுகணை எதுவும் தாக்கவில்லை. இந்த தகவல் என்பது அடிப்படை ஆதாரமற்றது. இதில் உண்மையில்லை'' என்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதேபோல் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் பொய்யான செய்தி பரப்புவதை நம் வெளியுறவத்துறையும் விமர்சனம்செய்துள்ளார். இதுதொடர்பாக நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‛‛ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நன்கு தெரியும். யார் அவர்களுக்கு உண்மையான நண்பன் யார்? உண்மையான எதிரி யார்? என்பது நன்றாக தெரியும். அதேபோல் இறையாண்மையை மீறி எந்த நாடு எல்லை தாண்டி மோதலை கடைப்பிடிக்கும் என்பதும் மக்களுக்கு தெரியும்.
எந்த நாடு வரலாற்று ரீதியாக பொதுமக்கள் மற்றுள் உள்கட்டமைப்புகளை நோக்கி தாக்கி உள்ளது? என்பது மக்களுக்கு தெரியும். பாகிஸ்தானின் இந்த தகவல் என்பது மிகவும் அற்பமானது. ஜோடிக்கட்டது. இத்தகைய பொய்கள் ஒருபோதும் நிலைக்காது. '' என்று விமர்சனம் செய்துள்ளார். இதன்மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் பாகிஸ்தானின் பொய் பிரசாரம் என்பது தொடர்கிறது. இப்போதும் நம் நாட்டின் ஏவுகணை ஆப்கானிஸ்தானை தாக்கியதாக பொய்யை பரப்பி நம்மிடமும், ஆப்கானிஸ்தானிடமும் வாங்கி கொண்டுள்ளது
மேலும் நம் நாட்டுடனா மோதலின்போது பாகிஸ்தான் இதுபோன்று பல பொய்களை அந்த நாட்டு மக்களிடம் பரப்பி வருகிறது. நம் நாட்டின் ஏவுகணை, போர் விமானங்கள், விமான நிலையம், விமானப்படை தளங்களை தாக்கி அழித்ததாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டது. இதனை நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விக்ரம் மிஸ்ரி முற்றிலுமாக மறுத்தார். அதோடு பாகிஸ்தான் அழித்ததாக கூறிய விமானப்படை தளத்தின் போட்டோவை அவர் காண்பித்து பாகிஸ்தானின் கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications