உள்ளாடையோடு நிற்கும் பெண்கள் போட்டோவை பிரசுரிப்பதில் இன்ஸ்டாகிராம் பாரபட்சம்?
நியூயார்க்: குண்டுப்பெண்கள் உள்ளாடையோடு நின்றால் அதை வெளியிடாத இன்ஸ்டாகிராம் நிறுவனம், ஒல்லியான பெண்கள் அவிழ்த்துப்போட்டால் பிரமாதமாக பிரசுரிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்த விடியோ பிளாக்கர் மேகன் தோன்ஜேஸ். இவர் உடல் எடையை குறைப்பது குறித்த ஒரு கட்டுரையை எழுதி அதற்காக தனது உடலையே போட்டோ பிடித்து புகைப்பட ஷேரிங் தளமான, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். உள்ளாடை மட்டும் அணிந்தபடி தனது உடல் சதைகளை காண்பிக்கும் வகையில் அந்த போட்டோவை பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராம் அந்த போட்டோவை தனது தளத்தில் இருந்து அகற்றிவிட்டது.
ஆபாசமாக எடுக்கப்பட்ட அல்லது நிர்வாண புகைப்படத்தை நாங்கள் பிரசுரிப்பதில்லை என்று இந்த போட்டோவை அகற்றுவதற்கு இன்ஸ்டாகிராம் காரணம் கூறியுள்ளது. இதுகுறித்த தகவல் வெளியானதும், சமூக வளைத்தளங்களில் இன்ஸ்டாகிராமுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மேகன் தோன்ஜேஸிடம் மன்னிப்பு கேட்ட இன்ஸ்டாகிராம், அவரது படத்தை மீண்டும் பிரசுரித்தது.
இதுகுறித்து மேகன் தோன்ஜேஸ் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் ஒல்லியான பெண்கள் உள்ளாடையுடன் நிற்கும் போட்டோக்கள் தாராளமாக கிடைக்கின்றன. நான் குண்டு பெண் என்பதால் இன்ஸ்டாகிராம் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது என்றார். இதுபற்றி இன்ஸ்டாகிராம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிர்வாண படங்களை வெளியிடுவதில்லை என்பது எங்கள் நிறுவன விதிமுறை. ஆனால் அனைத்து படங்களையும் பார்த்து அகற்றுவதில் முழு வெற்றியடையவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications