பாரீஸ் தாக்குதல்களின் முக்கிய மூளையாக இருந்தவருக்கு நெருக்கமான ஐஎஸ் தலைவர் பலி
ராக்கா: பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்தவருடன் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். பாரீஸ் போலீசார் தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த அப்துல் ஹமீது அபௌதுக்கு நெருக்கமான ஐஎஸ்ஐஎஸ் தலைவர் சராப் எல் முவாதான் கடந்த 24ம் தேதி சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் முவாதான் உள்பட 10 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.
முவாதானுக்கும் பாரீஸ் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பிரான்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முவாதான் படாகிளான் தியேட்டரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான சாமி அமிமூருக்கு நெருக்கமானவர் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
26 வயதான முவாதான் பாரீஸின் புறநகர் பகுதியில் வளர்ந்தவர். மொராக்கோவைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த முவாதானுக்கு 7 சகோதர, சகோதரிகள் உள்ளனர்.
முவாதான் கடந்த 2012ம் ஆண்டு ஏமன் அல்லது ஆப்கானிஸ்தான் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார். இன்டர்நெட் மூலம் தான் அவர் ஐஎஸ்ஐஎஸ் பக்கம் ஈர்க்கப்பட்டு சிரியா சென்றுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications