ஐ.எஸ்.க்கு ஆதரவாக பிரான்ஸ் பிணைக் கைதி தலையை துண்டிப்போம்- மிரட்டுவது அல்ஜீரிய தீவிரவாதிகள்!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தும் அமெரிக்காவுக்கு பிரான்சு ஆதரவு அளித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து பிரான்ஸ் போர் விமானங்களும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குண்டு வீச்சை தொடங்கின.
இந்த நிலையில் அல்ஜீரியாவுக்கு குகைகள் குறித்து ஆய்வு நடத்த சென்ற பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெர்வ் குயர்தெல் என்பவரை ஜீன்ட் - அல் - கலிபா (கலிபாக்களின் போர் வீரர்கள்) என்ற அல்ஜிரியா தீவிரவாத இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளது.
இவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடரபு உடையவர்களாம். இத்தகவலை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லூரண்ட் பெப்பியசும் உறுதி செய்து உள்ளார்.
இதனிடையே அல்ஜீரியா தீவிரவாதிகள் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் ஹெர்வ் குயர்தெல் இருக்கிறார். அவர் அருகே முகமூடி அணிந்த 2 தீவிரவாதிகள் உள்ளார்.
அவர்கள் குயர்தெலை துப்பாக்கி முனையில் வைத்துள்ளனர். இன்னும் 24 மணி நேரத்தில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பிரான்ஸ் நிறுத்த வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ள குயர்தெல் தலையை துண்டித்து படுகொலை செய்வோம் என தெரிவித்துள்ளனர். ஈராக், சிரியாவில்தான் இந்த தலை துண்டிப்பு பயங்கரத்தை ஐ.எஸ். இயக்கம் அரங்கேற்றி வந்த நிலையில் அல்ஜீரியா தீவிரவாதிகளும் இக்கொடூரச் செயலை அரங்கேற்றப் போவதாக மிரட்டியிருப்பது பிரான்ஸை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications