Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரை மொத்தமாக முடக்கும்.. வங்கதேசத்தின் புதிய பிரதமர்! இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களை பெற்றிருக்கிறது. எனவே இக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக தேர்வாக இருக்கிறார். ஆனால், இவர் பிரதமரானால் அமெரிக்காவுடனான நெருக்கம் அதிகரிக்கும். இது இந்தியாவுக்கு குறிப்பாக திருப்பூருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவை போலவே வங்கதேசத்திற்கும் அமெரிக்கா வரியை விதித்திருந்தது. இந்த வரி காரணமாக அந்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது. எனவே நிலைமையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர, வங்கதேசத்தின் இடைக்கால அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில், முக்கிய முடிவு எட்டப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Tiruppur Bangladesh

அமெரிக்க பருத்தி

ஒப்பந்தத்தின்படி, வங்கதேசத்திற்கான வரி 37%லிருந்து, 19% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜவுளி பொருட்களுக்கு 0% வரியை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. என்னதான் வங்கதேசம் ஜவுளி உற்பத்தியில் பெரிய கையாக இருந்தாலும், ஜவுளிக்கு தேவையான பருத்தி இந்தியாவிலிருந்து அந்நாடு வாங்கி வந்தது. தற்போது அமெரிக்கா 0% வரி ஆஃபர் கொடுத்திருப்பதன் மூலம், ஒரு நிபந்தனையை முன்வைத்திருக்கிறது. அதாவது, அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்து ஆடை தயாரித்து அனுப்பினால் அதற்கு 0% வரி சலுகை கொடுக்கப்படும்.

திருப்பூர் ஜவுளி உற்பத்தி

எனவே இனி வங்கதேசம் பருத்தியை இந்தியாவிலிருந்து இல்லாமல், அமெரிக்காவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்ய வாய்ப்பு அதிகம். அதுவும் தாரிக் ரஹ்மான் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே நிச்சயம் அமெரிக்க பருத்தியை வங்கதேசம் இறக்குமதி செய்து பயன்படும். இது இந்தியாவை பாதிக்கும். குறிப்பாக, திருப்பூரில் ஜவுளி உற்பத்தி கடுமையாக அடி வாங்கும்.

இந்தியாவுடனான உறவு

வங்கதேச தேர்தலுக்கு முன்னதாக, தாரிக் ரஹ்மான் The Diplomat இதழுக்கு அளித்த பேட்டியில், எனது வெளியுறவுக் கொள்கை என்பது பொருளாதாரத்தை மையமாக கொண்டது என கூறியிருக்கிறார். இதற்கு முன்பு இருந்த ஷேக் ஹசீனாவின் கட்சி இந்தியாவை அதிகமாக சார்ந்து இருந்து. ஆனால், நாங்கள் 'பங்களாதேஷ் பர்ஸ்ட்' என்கிற கொள்கையை பின்பற்ற திட்டமிட்டிருக்கிறோம் என கூறியிருக்கிறார். இதன் அர்த்தம், இந்தியாவுடன் முன்பு இருந்த சுமூகமான உறவு இனி தொடராது என்பதுதான்.

புதிய பாதையில் வங்கதேசம்

அதேபோல இதற்கு முன்னர் வெளியுறவுக் கொள்கைகள் அரசியல் உறவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. இனி பொருளாதார பலன்களை கொண்டு இந்த உறவுகளை அளவிடப்படும் என்றும் தாரிக் கூறியிருக்கிறார். தற்போதைய சூழலில் வங்கதேச பொருளாதாரம் ஜவுளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை நம்பிதான் இருக்கிறது. இந்த நிலையை மாற்றி, ஐடி, செமிகண்டக்டர், காலணிகள் மற்றும் விவசாய பொருட்களின் ஏற்றுமதி சார்ந்து இருக்கும் என தாரிக் கூறியிருக்கிறார்.

புதிய பிரதமர் தாரிக்

இப்படியாக நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க, அந்நாடு தனது ஜவுளி துறையை விட்டுக்கொடுக்க ரெடியாக இருக்கிறது. ஜவுளி துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முழுமையாக வங்கதேசம் ஏற்றுக்கொண்டால் அது திருப்பூருக்குதான் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், புதிய பிரதமர் தாரிக்கை இந்தியா கவனமாக அணுக வேண்டியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+