சிரியாவில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதி ஜிஹாதி ஜான் பலியா?
ராக்கா: சிரியாவில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் பல பிணையக்கைதிகளின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஜிஹாதி ஜான் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த முகமது இம்வாசி என்பவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார். ஜிஹாதி ஜான் என்று அழைக்கப்படும் அவர் ஏராளமான பிணையைக் கைதிகளின் தலையை துண்டித்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டு உலக மக்களை அதிர வைத்தவர்.

இந்நிலையில் ஜிஹாதி ஜானை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று அதிகாலை சிரியாவில் உள்ள ராக்கா நகர் அருகே தாக்குதல் நடத்தியது. இதில் ஜான் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பலியானது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த சூழலில் ஜான் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில்,
இது பழிக்குப் பழி அல்ல. போலியான கொள்கையின் பேரில் மக்களை கொலை செய்பவரை தான் குறிவைத்தோம் என்றார்.


Click it and Unblock the Notifications
