சொந்த இயக்கத்தைச் சேர்ந்த 39 பேரின் தலையைத் துண்டித்த ஐஎஸ் தீவிரவாதிகள்
சனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 39 பேரை தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக சிரியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பிறரின் தலையை துண்டிப்பது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பைச் சேர்ந்த 39 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

மந்திரம், கடவுளை அவமதித்தது, ஓரிணச்சேர்க்கை, கள்ளத்தொடர்பு, கொள்ளை, விழிப்புணர்வு இயக்கங்களில் சேர்ந்தது, அவைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தது, நுசயிரி படைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த 39 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதியில் இருந்து கடந்த 29ம் தேதி வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் மட்டும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுமக்கள் 32 பேர், 2 பெண்கள், எதிரி அமைப்புகளைச் சேர்ந்த 11 போராளிகள், பத்திரிக்கையாளர் ஒருவர் உள்பட 91 பேரை கொலை செய்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 1,800 பொதுமக்களை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். அதில் 181 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அவர்கள் அமைப்பை விட்டுவிட்டு வீட்டிற்கு தப்பியோடியபோதும், வெளிநாடுகளுக்கு உளவு பார்த்தபோதும் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications