குழந்தையை வெடிக்கச் செய்து வெடிகுண்டு பயிற்சி அளித்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள்
பாக்தாத்: ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சின்னஞ்சிறு குழந்தையை, வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான பயிற்சிக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ள சம்பவம் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா, ஈராக் நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினர், அங்குள்ள பிற பிரிவினரை கொன்று குவித்து வருகின்றனர். தங்களிடம் சிக்கிய ஷியா பிரிவு முஸ்லீம்களின் தலைகளை வெட்டுவது வழக்கம்.

ஐ.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவரை கொன்ற நபரை, கடந்த வாரம், பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், அந்த நபரின் குழந்தையை, வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான பயிற்சிக்கு, பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர். அந்த குழந்தையைச் சுற்றி குண்டுகளை போட்ட பயங்கரவாதிகள், அதை, 'ரிமோட்' மூலம் வெடிக்கச் செய்தனர். இதில், அந்த குழந்தை, துண்டு துண்டாக உடல் சிதறி பலியானது.
கடந்த 2013ம் ஆண்டு, 40 நாள் ஆன குழந்தையின் தலையை வெட்டி, படுகொலை செய்தனர். சில மாதங்களுக்கு ஐந்து வயது சிறுவன் ஒருவனை, கத்தியால் இரு துண்டுகளாக வெட்டி, தங்கள் கொலைவெறியை தணித்துக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications