ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு "செக்ஸ்" அடிமைகளைத் தேடும் பெண் தீவிரவாதிகள்.. டிவிட்டரில்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் உள்ள பெண்கள் படை, டிவிட்டர் வாயிலாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் ஆண்களைப் போலவே, பெண்கள் படையும் உள்ளது.

துப்பாக்கி ஏந்திப் போராடும் ஆசையில் தான் இந்த இயக்கத்தில் பெண்கள் சேர்கின்றனர். ஆனால், சேர்ந்த பிறகு தான் அவர்களுக்கு பெண்கள் போராட அனுமதில்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரிய வருகிறது.

செக்ஸ் அடிமைகள்...

செக்ஸ் அடிமைகள்...

இவ்வாறு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் பெண்களுக்கு ஆண் தீவிரவாதிகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வது, குழந்தைப் பெற்றுத் தருவது தான் முக்கிய வேலை. இது தவிர, டிவிட்டர் உட்பட சமூக வலைதளங்களின் வாயிலாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைப் பிடிக்கும் பணியிலும் இவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

வாரிசுகள் சுமக்க...

வாரிசுகள் சுமக்க...

ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடுவதற்காக ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சேருகிறார்கள். ஆனால் கடைசியில் செக்ஸ் பொம்மைகளாக அவர்கள் மாறி விடுகிறார்கள். தேவைப்படும்போதெல்லாம் செக்ஸ் இன்பம் கொடுக்கவும், ஐஎஸ் தீவிரவாதிகளின் வாரிசுகளை சுமக்கவுமே இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களாம்.

டிவிட்டரில் வலை...

டிவிட்டரில் வலை...

மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளை திரட்டும் வேலையும் இவர்களுக்கு தரப்படுகிறது. இதற்காக டிவிட்டரில் இவர்கள் வலை விரித்து பெண்களைப் பிடித்து வருகிறார்களாம்.

அபு சயாப்...

அபு சயாப்...

கடந்த மே மாதம் சிரியாவில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அபு சயாப் என்பவர் கொல்லப்பட்டார். அவரது மனைவி உம் சயாப் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது ஐஎஸ் அமைப்புக்கு டிவிட்டர் மூலம் பெண்களை அவர் பிடித்து வந்தது தெரிய வந்தது.

விரிவான தகவல்கள்...

விரிவான தகவல்கள்...

எப்படி பெண்களுக்கு வலை விரிக்கிறார்கள், அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த பல விரிவான தகவல்களை உம் சயாப் தெரிவித்துள்ளார்.

திருமண ஆசை...

திருமண ஆசை...

முதலில் தீவிரவாதிகளுக்கு கட்டி வைப்பதாக கூறி ஆள் பிடிக்கிறார்கள். பின்னர் அவர்களை விடுதியில் தங்க வைத்து செக்ஸ் அடிமைகளாக்குகின்றனராம். இந்தக் கொடூரப் பின்னணி தெரியாமல் பலரும் வந்து சிக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+