'டப்பு' குறைஞ்சு போச்சு.. தீவிரவாதிகளுக்கு சம்பளத்தைக் குறைத்த ஐஎஸ்ஐஎஸ்!
ராக்கா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் தீவிரவாதிகளின் சம்பளத்தை பாதியாக குறைக்க உள்ளார்களாம்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பு என்று கூறப்பட்டது. வங்கிகளை கொள்ளையடித்து, பெண்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்று, பழங்காலப் பொருட்களை கொள்ளையடித்து, எண்ணெய் கிணறுகளை ஆக்கிரமித்து தான் அந்த அமைப்பு பணக்கார அமைப்பாக ஆனது.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது ஒரு ஆணவணப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. நிதி நெருக்கடியால் தீவிரவாதிகளின் சம்பளத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக பைத்துல்மால் என்கிற ஈராக்கின் ராக்கா நகரில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருவூல அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிதி நிலைமை பற்றிய ஆவணப்படம் கடந்த மாதம் வெளியானது. ஆனால் தற்போது அந்த அமைப்பின் நிதி நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
மொசுல் நகரில் உள்ள பைத்துல் மாலின் தலைமையகத்தின் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த 13ம் தேதி நடத்திய தாக்குதலில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எரிந்து நாசமாகியது.
சம்பளம் பாதியாக குறைக்கப்படுவதால் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருந்து விலகி வேறு தீவிரவாத அமைப்புகளில் சேரத் துவங்கியுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications