உறவுக்கு மறுத்த 19 பெண்களை உயிருடன் எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

மொசுல்: ஈராக்கில் தங்களுடன் உறவு வைத்துக் கொள்ள மறுத்த 19 யசிதி இன பெண்களை இரும்புக் கூண்டுகளில் அடைத்து உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவரிவாதிகள்.

ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் யசிதி இன பெண்களில் 19 பேர் அவர்களுடன் உறவு கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் அந்த 19 பேரை இரும்புக் கூண்டுகளில் அடைத்து நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர்.

ISIS men burn 19 women to death for refusing sex

இந்த சம்பவத்தை பார்த்த மக்களால் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. தடுத்தால் அவர்களுக்கும் அதே நிலை என்ற பயத்தால் யாரும் அந்த பெண்களுக்கு உதவ முன்வரவில்லை.

19 பெண்கள் அலறி துடி, துடித்து உடல் கருகி பலியானதை பார்த்த மக்களால் கண்ணீர் சிந்தியதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈராக்கின் வடமேற்கு பகுதியில் உள்ள சிஞ்சார் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது அந்த நகரில் வசித்த ஆயிரக்கணக்கான யசிதி இன பெண்களை பிணையக்கைதிகளாக பிடித்தனர். அதில் பலரை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளதுடன், சிலரை செக்ஸ் அடிமை சந்தையில் விற்றுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+