ஒபாமா மனைவியை கிண்டலடித்து டிவிட் போட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!
பாக்தாத் ஈராக்கை நடு நடுங்க வைத்துக் கொண்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியைக் கிண்டலடித்து டிவிட் வெளியிட்டுள்ளனர்.
நைஜீரியாவில் போக்கா ஹரம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் பிரிங் பேக் அவர் கேர்ள் பிரசாரத்தில் கலந்து கொண்டு மிஷல் ஒபாமாவும் அந்த வாசகம் இடம் பெற்ற அட்டையுடன் போஸ் கொடுத்து டிவிட்டரில் போட்டிருந்தார்.
தற்போது அந்தப் படத்தை எடுத்து போட்டோஷாப் செய்து கிண்டலடித்து ஒரு டிவிட் வெளியிட்டுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.

மிஷல் மூலமாக கிண்டல்
#BRINGBACKOURHUMVEE என்ற வாசகம் அடங்கிய அட்டையை மிஷல் பிடித்திருப்பது போல சித்தரித்துள்ளனர் தீவிரவாதிகள்.

டிவிட்டரில்
இதுகுறித்த படத்தை மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவுக்கான ஏஎப்பி செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் பாட்ரிக் பாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவு இணையதளங்கள், டிவிட்டர் பக்கங்களில் இந்த மார்பிங் படத்தைப் பார்த்து அதை எடுத்து தனது பக்கத்தில் போட்டுள்ளார் பாஸ்.

நைஜீரிய தீவிரவாதிகள்
#bringbackourgirls என்ற வாசகத்துடன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிரபலங்கள், பல்துறையினர், நைஜீரிய தீவிரவாதிகளிடமிருந்து மாணவிகளை மீட்ககக் கோரி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படித்தான் மிஷலும் இந்த வாசகத்துடன் போஸ் கொடுத்திருந்தார். அதைத்தான் தற்போது ஈராக் தீவிரவாதிகள் கிண்டலடித்துள்ளனர்.

அமெரிக்க ஹம்வீ…
இந்த ஹம்வீ என்பது அமெரிக்காவின் ராணுவ ரோந்து மற்றும் தாக்குதல் டிரக் ஆகும். கடந்த வாரம் ஈராக்கில் தாக்குதலைத் தொடங்கியபோது இந்த ஹம்வீக்களைத் திருடித்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.

திருடித் திருடி
மேலும் அமெரிக்காவிடமிருந்து வாங்கி ஈராக் ராணுவத்தினர் பயன்படுத்தி வந்த டிரக்குகள், ஹெலிகாப்டர்கள், புல்டோசர்கள், ஆயுதங்களையும் இந்த்த் தீவிரவாதிகள் திருடியுள்ளனர். இதை வைத்துத்தான் தற்போது அட்டகாசம் செய்து வருகின்றனர்.

சிரியாவுக்கும் பார்சல்
மேலும் கைப்பற்றப்பட்ட பல தளவாடங்களை அவர்கள் சிரியாவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஈராக்கைத் தொடர்ந்து சிரியாவிலும் அவர்கள் வெறியாட்டம் போடவுள்ளனர்.

வேடிக்க பார்க்கும் அமெரிக்கா
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை அமெரிக்கா தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் ஈராக்கைக் காப்பாற்ற படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் ஒபாமா அறிவித்துள்ளார்.

இன்னும் கொஞ்சம் ப்ளீஸ்
இந்தப் பின்னணியில்தான் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஹம்வீக்களை அனுப்புங்க என்று அமெரிக்காவைக் கிண்டலடிக்கும் வகையில் மிஷல் படத்தில் சில்மிஷம் செய்துள்ளனர் தீவிரவாதிகள்.












Click it and Unblock the Notifications