ஈராக்கில் ஓங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கை! ரமாதி நகரும் வீழ்ந்தது!!
பாக்தாத்: ஈராக்கில் அரச படைகள் வசம் இருந்த ரமாதி நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ரமாதிநகரில் ஈராக் அரசு கட்டிடங்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
சிரியா மற்றும் ஈராக்கில் பெரும்பான்மையான பகுதியினை தங்களதுவசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். அத்துடன் இஸ்லாமிய தேசத்தின் தலைவராக அதாவது கலிபாவாக அல் பக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றாதோருக்கும் பிற மதத்தினருக்கும் காட்டுமிராண்டித்தனமான கொடூர தண்டனைகளை விதித்து வருகிறது ஐ.எஸ். இயக்கம். இந்த அமைப்புக்கு எதிரான யுத்தத்துக்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் ஈராக்கில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ரமாதிநகரை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரமாதிநகரின் முக்கிய அரசு கட்டிட்டங்களை தீவிரவாதிகள் பிடித்துஉள்ளனர்.
ஈராக்கின் மிகப்பெரிய மாகாணத்தின் ரமாதிநகர் வீழ்ந்திருப்பது ஈராக்கிய அரசு படைக்கு மிகவும் இழப்பு என்றே கருதப்படுகிறது. அத்துடன் நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறைபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதியுடன் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன், அதிகமான ஆயுத உதவிகளை வழங்க உறுதி அளித்து உள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. ஈராக்கில் முக்கிய மாகாணத்தை தம் வசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதம் அங்கு அரசு கட்டிடங்களில் அவர்களது கொடியை பறக்கவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications