'அந்த' இடத்தை வெட்டி எறியுங்கள்: பெண்களுக்கு உத்தரவிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: ஈராக் பெண்கள், தங்கள் பெண் உறுப்பின் முக்கிய பாகங்களை வெட்டி எறிய வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர். சன்னி பிரிவு இஸ்லாமியர்களான அவர்களுக்கும், ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கும் நடுவே சண்டை நடந்து வருகிறது.

இந்திய நர்சுகள்

இந்திய நர்சுகள்

இந்நிலையில் ஈராக்கின் மொசூல் நகரில் இந்திய நர்சுகள் சிலர் இவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பெண் போராளிகள்

பெண் போராளிகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பெண்களையும் தங்கள் குழுவில் சேர்த்துள்ளனர். ஈர்க்கில் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை ஒழுங்காக பின்பற்றுகிறார்களா என்பதை பெண் ஐஎஸ்ஐஎஸ் குழுவினர் சோதித்து பார்த்துவருகின்றனர். அப்படி பின்பற்றாதவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது.

பெண் சிதைப்பு செய்ய உத்தரவு

பெண் சிதைப்பு செய்ய உத்தரவு

இந்நிலையில், திடுக்கிடும் ஒரு தகவலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் பெண் அதிகாரி ஜேக்குலின் பேட்காக் கூறுகையில் "ஈராக்கிலுள்ள 11 வயது முதல் 46 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரும் 'பெண்சிதைப்பு' செய்து கொள்ள வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 'பத்வா' உத்தரவிட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

40 லட்சம் பெண்கள் பாதிப்பு

40 லட்சம் பெண்கள் பாதிப்பு

ஈராக்கில் பெண் சிதைப்பு கட்டாயம் இல்லை என்ற போதிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த உத்தரவால் ஈராக்கிலுள்ள 40 லட்சம் பெண்களும், சிறுமிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சுவதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

ஆப்பிரிக்கா, மேற்காசிய நடைமுறை

ஆப்பிரிக்கா, மேற்காசிய நடைமுறை

பெண் சிதைவு எனப்படுவது எந்த ஒரு மதப்பிரிவுக்கும் சொந்தமானது கிடையாது. வடக்கு ஆப்பிரிக்காவின் பல பழங்குடியினரும், மேற்காசியாவின் இஸ்லாமிய நாடுகளில் சில குழுக்களும் இதை செய்து கொள்கிறார்கள். இந்நிலையில்தான் ஐஎஸ்ஐஎஸ் இதை கட்டாயப்படுத்தியுள்ளதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது.

எப்படி செய்யப்படுகிறது?

எப்படி செய்யப்படுகிறது?

பெண் சிதைவு அல்லது பெண் சுன்னத் என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை மிகவும் வலியும், வேதனை தரக்கூடியது. பெண் உறுப்பின் கிளிட்டோரியஸ் எனப்படும் உணர்ச்சி மிகு பகுதியை, பிளேடு அல்லது கத்தியால் வெட்டி எடுப்பதுதான் பெண்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் பெண் உறுப்பின் உதடு போன்ற பகுதியும் சேர்த்து வெட்டி எடுக்கப்படுமாம்.

குழந்தை பெற்கும் இயந்திரம்

குழந்தை பெற்கும் இயந்திரம்

பெண் உறுப்பின் கிளிட்டோரியஸ் போன்ற முனைப்பகுதியில் அதிகப்படியான நரம்புகள் வந்து சேரும். எனவே உறவின்போது அதிக கிளர்ச்சியை இப்பகுதி அளிக்கும். இந்த பகுதியை வெட்டி எடுப்பதன் மூலம், ஆணுடன் உறவு கொள்ளும்போதும், பெண்ணுக்கு பெரிதாக எந்த ஒரு கிளர்ச்சியும் கிடைக்காது. குழந்தை பெற்கும் இயந்திரம் போல மட்டுமே பெண் மாற்றப்படுவார். கிளர்ச்சியை தடுப்பதால், பெண்களுக்கு காம எண்ணம் எழாது என்று ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளின் சில குழுக்கள் நம்புகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+