செக்ஸ் வைக்க மறுத்த 17 வயது சிறுமியின் தொடையில் வெந்நீரை ஊற்றிய ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: உடலுறவு கொள்ள மறுத்த 17 வயது சிறுமியின் தொடையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெந்நீரை ஊற்றிய கொடுமை நடந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பொதுமக்களை தலையை துண்டித்து கொன்று வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன், சந்தையில் செக்ஸ் அடிமைகளாக விற்று விடுகின்றனர்.
இது குறித்து தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிவந்துள்ள 17 வயது யசிதி சிறுமி கூறுகையில்,

பலாத்காரம்
நானும், என் தங்கையும் தீவிரவாதிகளின் பிடியில் 9 மாதங்கள் நரக வேதனை அனுபவித்தோம். அவர்கள் தினமும் என்னையும், என் தங்கையையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் எங்களை ஏலத்தில் விட்டுவிட்டனர்.

வெந்நீர்
என்னை பல தீவிரவாதிகள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். அது மட்டுமின்றி அவர்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யாத போது எல்லாம் என் தொடையில் வெந்நீரை ஊற்றினர். நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். கருவை கலைப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

கொடுமை
குர்ஆனில் இருந்து சூராக்களை ஒப்பிக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு ஒப்பிக்கையில் என்னை வாங்கிய அல் ருஸியா என்பவரும், அவரது பாதுகாவலர்களும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள். மொசுல் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த பெண்கள், சிறுமிகளுடன் என்னை கைவிலங்கு போட்டு அடைத்து வைத்திருந்தனர்.

கன்னிகள்
கன்னித்தன்மையுடன் இருப்பவர்களை 40 ஆண்களுடன் ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தங்களுக்கு எந்த கன்னி வேண்டுமோ அவரை பார்த்து கைகாட்டுவார்கள்.

பாவி
அல் ருஸியா தினமும் காலை பெண்கள் மற்றும் சிறுமிகளை நிர்வாணமாக்கி வரிசையாக நிற்க வைப்பார். அவர்களை முகர்ந்து பார்த்து அதில் யாருடன் அன்று உடலுறவு கொள்வது என்பதை முடிவு செய்வார். அவர் ஒருவரை தேர்வு செய்த பிறகு மீதமுள்ளவர்களுடன் அவரது பாதுகாவலர்கள் உறவு கொள்வார்கள்.

உணர்ச்சியே இல்லை
தீவிரவாதிகள் என்ன செய்ய சொன்னாலும் செய்ய வேண்டும். இல்லை எனில் அடித்து துன்புறுத்துவார்கள். அவர்களிடம் அடி வாங்கி வாங்கி மறத்துப் போய்விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் போன்று இருந்தது என்றார் அந்த சிறுமி.

விடுதலை
கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சார் அருகே பெஷ்மெர்கா படையினர் நடத்திய தாக்குதலில் அல் ருஸியா மற்றும் அவரது பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அவரது பிடியில் இருந்த பெண்கள், சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications