30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களை தலை துண்டித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்.. வீடியோவால் பரபரப்பு
பர்கா, லிபியா: எத்தியோப்பிய நாட்டு கிறிஸ்தவர்கள் 30 பேரை தலை துண்டித்துக் கொன்றுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத வெறியர்கள். இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
லிபியாவில் வைத்து இந்த கொடூரச் செயலை அவர்கள் நடத்தியுள்ளனர். 29 நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சியில், 2 குழுக்களாக எத்தியோப்பியர்களைக் கொல்கிறார்கள் தீவிரவாதிகள். 2 இடங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. கிழக்கு லிபியாவில் உள்ள பர்கா மாகாணத்தில் ஒரு குழுவையும், தெற்கு லிபியாவில் உள்ள பஸ்ஸான் மாகாணத்தில் இன்னொரு குழுவையும் தலை துண்டித்துக் கொன்றுள்ளனர் தீவிரவாதிகள்.

இந்த வீடியோவில் கையில் துப்பாக்கியுடன் காணப்படும் முகமூடி அணிந்த தீவிரவாதி ஒருவன் கூறுகையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் முஸ்லீமாக மாற வேண்டும். இல்லாவிட்டால் குரானில் கூறியுள்ளபடி சிறப்பு வரியைக் கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளான்.
தெற்கு லிபியாவில் உள்ள எத்தியோப்பியர்களை சுட்டுக் கொன்றுள்ளனர் தீவிரவாதிகள். கிழக்கு லிபியாவில் கொல்லப்பட்ட அனைவரையும் ஒரு கடற்கரையில் வைத்து தலையைத் துண்டித்துக் கொன்றுள்ளனர்.
ஈராக், சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், 2011ம் ஆண்டு முதல் லிபியாவிலும் புகுந்து விட்டனர். கடாபி பிடிபட்டு கொல்லப்பட்ட பின்னர் லிபியா தற்போது ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் லிபியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புக படகுகளில் ஏறித் தப்பி வருகின்றனர். அப்படித் தப்பி வருவோரில் பலர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications