துனிசியாவில் 23 பேரை கொன்றது தூவானமே, மழை இனி தான்: ஐஎஸ்ஐஎஸ்
துனிஸ்: துனிசியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
துனிசியாவில் உள்ள தேசிய பார்டோ அருங்காட்சியத்திற்குள் 2 துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புதன்கிழமை புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 23 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். அந்த 2 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அருங்காட்சியகம் உள்ள துனிஸ் நகரில் தான் ஜனநாயகத்தை எதிர்பார்த்து மக்கள் துவங்கிய அரபு வசந்தம் போராட்டங்கள் துவங்கின. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி துவங்கிய அரபு வசந்தம் போராட்டம் வரிசையாக பிற அரபு நாடுகளுக்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியகத்தில் நடந்த சம்பவத்தில் இறந்தவர்களில் பலர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். அதில் 12 பேர் எம்.எஸ்.சி. ஸ்பெளென்டிடா சொகுசு கப்பலிலும், 5 பேர் காஸ்டா பாசினோஸா சொகுசு கப்பலிலும் வந்தவர்கள்.
இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இது தூவானம் தான், மழை இனிமேல் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியக தாத்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யாசீன் லாபிதி மற்றும் ஹாத்தீம் என்று தெரிய வந்துள்ளது. அதில் யாசின் உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications