ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இடைக்கால தலைவர் அஃப்ரியும் அமெரிக்க விமானத் தாக்குதலில் பலி
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அடுத்த தலைவர் என்று கூறப்பட்டு வந்த முன்னாள் இயற்பியல் ஆசிரியர் அபு அலா அல் அப்ரி ஈராக்கில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தாக்குதலில் பலியானார் என்று ஈராக் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் படுத்த படுக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளை ஓடியாடி கவனிக்க முடியவில்லை.
இதையடுத்து பாக்தாதி குணமாகும் வரை இடைக்கால தலைவரை நியமிக்க 9 மூத்த ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் அடங்கிய ஷுரா கவுன்சில் முடிவு செய்துள்ளது.

தேர்தல்
இடைக்காலத் தலைவருக்கான தேர்தலில் ஈராக்கைச் சேர்ந்த இருவரும், சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிடுகின்றனர். இதில் ஈராக்கைச் சேர்ந்த முன்னாள் இயற்பியல் ஆசிரியரான அபு அலா அல் அஃப்ரி இடைக்கால தலைவராக தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டது.

மரணம்
இடைக்கால தலைவர் இந்த வாரம் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில் நேற்று ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கையில் வெளிநாட்டுப்படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் அஃப்ரி இறந்துவிட்டார் என ஈராக் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மசூதி
ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள தெல் அபார் அருகே உள்ள அல் இயாதியா கிராமத்தில் இருக்கும் மசூதியில் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் அஃப்ரி கொல்லப்பட்டார் என்று ஈராக் பாதுகாப்புத் துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியாகவா?
முன்னதாக பாக்தாதி உள்ளிட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில் அஃப்ரியின் விவகாரமும் அப்படித் தான் உள்ளது. அஃப்ரி இறந்துவிட்டது பற்றி தெரியும் ஆனால் அதை உறுதி செய்ய முடியாது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

பாக்தாதி
முன்னதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி இறந்துவிட்டார் என்று ஈரான் நாட்டு ரேடியோ செய்தி வெளியிட்டது. ஆனால் ஈரான் ரேடியோ கூறியது போன்று பாக்தாதி இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications