21 எகிப்திய கிறிஸ்துவர்களை தலை துண்டித்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்– வீடியோவால் பரபரப்பு
நியூயார்க்: எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக தலையைத் துண்டித்துக் கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் லிபியா தலைநகர் திரிபோலி அருகே உள்ள கடற்கரை என்று தெரிய வந்துள்ளது.

ஆரஞ்சு நிற உடையை அணிந்துள்ள கிறிஸ்துவ பிணைக்கைதிகளை முகமூடி அணிந்த தீவிரவாதிகள் கொலை செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்துவ பிணைக்கைதிகளை மண்டியிடவைத்து அந்த தீவிரவாதிகளுக்கு தளபதி போன்ற ஒருவர் கட்டளை இட மற்றவர்கள் ஒரே நேரத்தில் அதனை நிறைவேற்றுகின்றனர். 21 பேரும் கொடூரமாக கொல்லப்பட்ட பின்னர் கடைசியாக இந்த போர் தொடரும் என அந்த தளபதி அறிவிப்பு வெளியிடுகிறார். மேலும் விரைவில் ரோமை பிடிப்போம் என்றும் வீடியோவில் கொக்கரித்துள்ளனர் அவர்கள்.
இந்த செயலை எகிப்து அரசு வன்மையாக கண்டித்துள்ளது. எகிப்தியர்கள் கொலை செய்யப்பட்டதற்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என எகிப்து அதிபர் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தக்க பதில் சொல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications