குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு: சோஷி நகரில் பூகம்பம் வர கூட்டுப் பிரார்த்தனை
சோஷி: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் சோஷி நகரில் பூகம்பம் வர இஸ்லாமிய குழு ஒன்று தனது பிரார்த்தனையைத் தொடங்கியுள்ளதாம். இந்த பிரார்த்தனையில் மற்றவர்களையும் பங்கு கொள்ள அந்தக்குழு இணையதளம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யாவின் சோஷி நகரில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடக்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவர்களின் எதிர்ப்புக்கு முக்கியக் காரணம் சோஷி ஒலிம்பிக்கில் சில போட்டிகள் 19ஆம் நூற்றாண்டில் வெளியேற்றப்பட்ட சிர்சாசியன் பிரிவினரின் தாயகமாகக் கருதப்பட்ட இடங்களிலும் நடைபெறுவது தான்.
ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்லாமிய போராளிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையிலும், பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்ம் ஒலிம்பிக் போட்டிகளைத் தடை செய்ய அழைப்பு விடுத்த காகசஸ் எமிரெட் என்ற பிரிவு தனது இணையதளப் பிரிவின் இங்குஷெட்டியா ஊடகக் கிளையில் புதிய அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

சாத்தானின் நடனங்கள்....
இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் பாதுகாக்க நமது முன்னோர்கள் ரத்தம் சிந்திய இடத்தில் இத்தகைய சாத்தானின் நடனங்களை நாத்திகர்கள் நடத்துகின்றனர்.

குருடர்களால் பார்க்க முடியும்....
மத நம்பிக்கையற்ற இவர்கள் செய்யும் கொடுமையான செயல்களை குருடர்கள் கூட பார்க்கமுடியும்.

பூகம்பம் வர ப்ரே பண்ணுவோம்...
எங்களைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இந்தப் போட்டிகளின்போது சோஷி நகரில் பூகம்பம் வருவதற்காக இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கடைசி பூகம்பம்...
இதனால் மத நம்பிக்கை அற்றோர் அனைவரும் அழிந்து போவார்கள். மத நம்பிக்கை அற்றோருக்கான கடைசி பூகம்பத்தை கடவுள் சோஷியில் உண்டாக்கட்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications