சத்தமில்லாமல் இஸ்ரேல் செய்த பெரிய சம்பவம்! ஒரே தாக்குதலில் ஹவுதி பிரதமர் & பல அமைச்சர்கள் உயிரிழப்பு
சனா: மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்து வரும் சூழலில் ஹவுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் நடத்திய தீவிரத் தாக்குதலில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி வரும் ஹவுதி பிரதமர் அஹமது அல் ரஹாவி கொல்லப்பட்டுள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு ஹவுதி அமைச்சர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மத்தியக் கிழக்கில் தொடர்ச்சியாக மோதல்கள் நடந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் தொடங்கியது. பிறகு ஹிஸ்புல்லா, ஹவுதி எனப் பல்வேறு அமைப்புகளும் உள்ளே வரப் போர் விரிவடைந்தது. இந்த மோதல்களால் அந்தப் பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டார்
இதற்கிடையே ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பிரதமராகச் செயல்பட்டு வந்த அஹமது அல்-ரஹாவி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழு உறுதி செய்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலில் அல்-ரஹாவி மட்டுமின்றி, பல அமைச்சர்களும் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டில் பெயரளவில் ஒரு அரசு இருந்தாலும் கூட அங்குப் பெரும்பகுதியை இந்த ஹவுதி படைகளே கட்டுப்படுத்துகிறது. தலைநகர் சனா உட்பட பல பகுதிகள் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இப்போது சனாவின் பிரதமர் கொல்லப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
அரசு செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சனாவில் கடந்த வியாழக்கிழமை கருத்தரங்கு நடந்துள்ளது. அந்தக் கருத்தரங்கில் பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தத் தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட இஸ்ரேல், சரியாக அந்தக் கருத்தரங்கு நடக்கும் இடத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அதில் பங்கேற்ற பலரும் உயிரிழந்ததாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது.
அல்-ரஹாவி கடந்த 2024 ஆகஸ்டு மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசின் பிரதமராக இருந்து வந்தார். அவரை காலி செய்யும் வகையிலேயே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. சனாவில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் ராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது..
ஹவுதி அமைப்பு
காசா போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைப்புகளில் முக்கியமானது ஹவுதிக்கள் ஆகும். காசா போரைக் கண்டித்துக் கடந்த சில மாதங்களாக இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுடன் தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்போது ஹவுதிக்கள் தெரிவித்திருந்தனர். ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தினாலும் அதில் பெரும்பாலானவை இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன இருப்பினும், ஹவுதி குழு தனது தாக்குதல்களைத் தொடர்ந்தன.
இஸ்ரேல் பதிலடி
அதற்குப் பதிலடியாகவே ஹவுதிக்கள் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், சனாவின் பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மறுபுறம் இந்தப் பதற்றம் செங்கடலிலும் பரவியுள்ளது. இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைத்து ஹவுதிக்கள் தாக்கி வருகிறது.. இதற்குப் பதிலடியாக, ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா மற்றும் ஹோடெய்டா துறைமுகம் உட்படப் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்கியது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications