கொதித்துப்போன இந்தியா.. உடனே மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்.. ஈரான் மோதலுக்கு நடுவே என்ன நடந்தது?
டெல்அவிவ்: ஈரானுடனான மோதலுக்கு நடுவே இஸ்ரேல் வெளியிட்ட மேப் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்தியாவிடம் இஸ்ரேல் மன்னிப்பு கோரியுள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று இஸ்ரேல், ஈரான் அணு சக்தி கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழிந்தது. அணு ஆராய்ச்சி கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையம், ராணுவத்துக்கு சொந்தமான சுரங்க தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன், ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலை தாக்கி வருகிறது. இருநாடுகள் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில்தான் தான் ஈரான் இஸ்ரேலுக்கு மட்டுமில்லை. மொத்த உலகுக்கும் அச்சுறுத்தல் என்பதை காட்டும் வகையில் இஸ்ரேல் ராணுவம் பதிவு ஒன்றை செய்தது. அதில் ஈரானின் ஏவுகணை எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்பது தொடர்பாக இஸ்ரேல் மேப்-பை பயன்படுத்தி இருந்தது. அதில், ‛‛ஈரான் மொத்த உலகத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேல் இன்னும் தனது இலக்கை அடையவில்லை. இது தொடக்கம் தான். எங்களுக்கு வேறு வாய்ப்பில்லை. பதிலடி கொடுக்க மட்டுமே வாய்ப்புள்ளது'' என தெரிவித்து இருந்தது.
இந்த பதிவில் இடம்பெற்றிருந்த மேப் தான் சர்ச்சையை கிளப்பியது. அதில் நமக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்பது போலவும், வடகிழக்கு மாநிலங்கள் நேபாளுக்கு சொந்தம் என்பது போலவும் மேப் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளது. அதில், ‛‛இந்த மேப் பிராந்தியத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாடுகளின் சர்வதேச எல்லைகளை துல்லியமாக காட்ட தவறிவிட்டோம். இந்த மேப்பால் ஏற்பட்ட தவறுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
-
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications