கதறிய ஹாட் லைன்.. போன் போட்டும் எடுக்காத ரஷ்யா.. இஸ்ரேல் பெஞ்சமினை பதற விட்ட விளாடிமிர் புடின்
மாஸ்கோ: ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா நேரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. நேரடியாக இந்த விவகாரத்தில் ரஷ்யா களமிறங்கி உள்ளது. நேற்று ஈரான் தாக்குதலுக்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக முயன்று உள்ளார்.
ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு எவ்வளவு முயன்றும் புடினுடன் அவரால் பேச முடியவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்டு ஹாட் லைன் வேலை செய்யாமல் இருந்துள்ளது. ரஷ்யா இந்த ஹாட் லைனை எடுக்காமல் இஸ்ரேலுக்கு போக்கு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யா நிலைப்பாடு: ஏற்கனவே, ஈரான் கேட்ட ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீனரேடார்களை மாஸ்கோ வழங்கத் தொடங்கியுள்ளது. ஈரானுக்கு ராணுவ உதவிகளை ரஷ்யா தீவிரமாக வழங்கி வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது. சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது. லெபனாலில் இருந்து இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
உதவ ரெடி: ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அங்கே நடந்த மீட்டிங்கிற்கு பிறகு ஈரானுக்கு ஆதரவாக இருப்போம். ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
ஈரானுக்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம். ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம். தேவையான ஆதரவு நிலைப்பாடுகள், சப்போர்ட்டுகளை வழங்குவோம் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் வருகை பிரச்னையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மோதல் உலக நாடுகளுக்கு இடையிலான போராக, மிகப்பெரிய மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பெரிய பங்கு: ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்ட நிலையில்.. ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் அணு ஆயுதங்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் உலகம் முழுக்க எழுந்துள்ளது.
பொதுவாக சர்வதேச அளவில் இக்கட்டான காலங்களில் ஈரானிய தேசத்திற்கு ஆதரவாக நின்ற நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். அந்த வகையில் தற்போது ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்டது. ஈரான் மீது சில பொருளாதார ரீதியான தடைகள் உள்ளன. இதனால் ஈரானால் சில ஆயுதங்களை வாங்க முடியாது, தயாரிக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்கி உள்ளது. கப்பல் மூலமாக வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போரில் ரஷ்யாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications