ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. மெயின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை? பகீர்
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தலைமையகத்தில் இஸ்ரேல் நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் என்பது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நரசல்லாவை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நிலை என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் போரை தொடங்கி நடத்தி வருகிறது. இதற்கு அண்டை நாடான லெபனானின் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 10 நாட்களாக இருதரப்புக்கும் இடையேயான மோதல் என்பது வலுவடைந்துள்ளது. ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வழக்கத்தை விட இஸ்ரேல் மீது லெபனானும், லெபனான் மீது இஸ்ரேலும் ஏவுகனை தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இஸ்ரேல் - காசாவை தொடர்ந்து இஸ்ரேல் - லெபனான் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள தாஹியில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைமையகம் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்இந்த தாக்குதல் என்பது ஹிஸ்புல்லாவின் தலைவரான ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாவை டார்க்கெட் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் அந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லாவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று ஹசன் நஸ்ரல்லாவுடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகளாக உள்ளனர். இதில் 17 பேரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இன்னும் டாப் தலைவராக உள்ள ஹசன் நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருக்கிறார். இதனால் அவரை தீர்த்து கட்ட நேற்று இஸ்ரேல் ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
***












Click it and Unblock the Notifications